PDA

View Full Version : கல்லூரி கவிதை



அனுராகவன்
11-08-2014, 02:59 PM
கல்லூரி வாழ்க்கை
கள்ளம் கபடம்
இல்லா வாழ்க்கை
மனவிட்டு பேசுவோம்..
பல மனங்களை திருடுவோம்
கடைசி பெஞ்சில் அமருவோம்..
கிலாசுக்கு கட் அடிப்போம்..
பெண்களை கண்டால் விசில் அடிப்போம்..
நண்பர்களுடன் படத்திற்கு போவோம்..
லூட்டிக்கு நாங்க ரெடி..
பணத்திற்கு நீங்க ரெடியா..(அப்பாவை பார்த்து)


கலர் கலரா போகுது
கண்ணை கவர்ந்து இழுக்குது
உதட்டு சாயமோ வெழுக்குது
உண்டியலில் பணமும் குறையுது
அரட்டைக்கு பேர் பெற்ற இடம்
சேட்டைக்கு கூடும் இடம்...
மொத்தத்தில் குதுகலம்....

அனுராகவன்
11-08-2014, 03:01 PM
சீனியர் வந்தால் கும்புடுவோம்
வித வித மிமிக்கிரி செய்து காட்டுவோம்
பஸ்ஸில் படியில் தொங்குவோம்
டிக்கெட் இல்லாம பயணம் செய்வோம்
பஸ்ஸை முன்னே விட்டு பிடிப்போம்..
தலையே மாறி மாறி சீவுவோம்..
பல்ல காட்டி இழிவோம்
அவள் பார்வைக்காக ஏங்குவோம்..

வாத்தியாரு வந்தால் சிரிப்போம்
வணக்கம் சொல்லி போவோம்
கேள்வி கேட்டா முறைப்போம்
மீறி கேட்டா பல்லை உடைப்போம்

அனுராகவன்
11-08-2014, 03:01 PM
உடல்கள் பல தோன்றினாலும்
உயிர்கள் ஒன்னு சேருது
மனங்கள் பல பார்த்தாலும்
உறவுகள் ஒன்னு கூடுது..

பார்ப்பவரை அழைப்போம்
டேய்! மச்சான்
அவன் கையே என் மேல் வச்சான்..
அவனை அடிப்பேன் ,கல்லூரிக்கு
விடுவோம் விடுமுறை..
அது தினமும் நடக்குமுல....

அனுராகவன்
11-08-2014, 03:02 PM
சீருடையும் தேவையில்லை
புத்தக மூட்டையும் தேவையில்லை
குளிங் கிளாசு அணிந்துக்கொள்வோம்
கலர் கலராக பார்க்க பழகிக்கொள்வோம்
வண்ண வண்ண போன் வைத்துக்கொண்டு
வட்டமிடும் பெண்களை சைட்டு அடிப்போம்...

வகுப்பிற்கு போன போர் அடிக்கும்
வாத்தியார் பேசினா காது வலிக்கும்
நண்பானாக இருக்க பழகுவோம்
பிறகு ஒற்றை சொல்லுக்காக பின்னாடி
அலைவோம்..
தாடி வைத்து டாடியாக மாறுவோம்
கையில் பீடியோடு வீதியில் திரிவோம்

அனுராகவன்
11-08-2014, 03:04 PM
கல்லூரி
கனவாக போகும் நினைவுகள்
கச்சிதமாக போனதே தெரியல
கடவுளிடம் கேட்கிறேன்
மீண்டும் அந்த நாட்களை..

ஒரே தட்டில் உண்டு
ஒரே ரூமில் படுத்து
ஒரே பெண்ணே கண்ணடித்து
ஒரே திட்டு மையாக போகும்
நண்பர்களின் வட்டாரம்..