PDA

View Full Version : மீண்டும் மழை வரும்....



kulirthazhal
10-08-2014, 08:49 AM
தனிமை சிலிர்த்தது
அந்த குளுகுளு காற்றில்..

அங்கே
ஒற்றைப்பாதையில்
ஈர மணலின்
புதுமழை ஓவியங்கள்...

அந்த
நவீன ஓவியங்கள்
மலராத வாசப்பூவின்
மகரந்தமாய் காத்துக்கிடப்பதாய்...

அவனின் சில எண்ணங்கள்.
கற்பனைகளையும், ஞானத்தையும்,
துணையாய் கொண்டு
கிடைத்தறியா பிம்பங்களை
தேடி, வருடி,
நெருங்கித்திளைக்கிறது...
அது
காப்பியமா?..
காதல் நயனமா?..
ஈசனமர்வா?..
ராசனவையா?...
நெருங்கித்தொட்டு
கண்ணை திறந்தான்..

அரைநாண் கயிற்றை
ஆடையாய் அணிந்த
துறுதுறு பயல்கள்
அதை துழவிவிட்டார்கள்...
பரப்பிய கால்களுக்கிடையே
கூட்டி விளையாட .....

அவனுக்குள் ஏனோ
எட்டவிருந்த ஞானத்தை
தட்டிவிட்டதாய் தவிப்பு...
ரசனையேனும் மிச்சமிருந்ததால்
விளையாட்டை நோட்டமிட்டான்..

வேப்பந்தளிரை
குவித்த மணலில் நட்டுக்கொண்டே
சிறுவன் சொன்னான்,
இது எல்லாம் என் மரங்கள்,
அதிகம் நட்டால்தான்
அழகு கிடைக்கும்....

அந்த
நவீன ஓவியம்
" பிள்ளை விளையாட்டாய்"
பரிணமித்ததால்,
அவனுக்கு
மீண்டும் ஒரு நாள் மழை வரலாம்...
புது ஓவியத்திற்காக... ..
- குளிர்தழல் ..

நாஞ்சில் த.க.ஜெய்
10-08-2014, 02:29 PM
மீண்டும் ரசிக்க தூண்டும் இயற்க்கையின் விளையாட்டு ..வாழ்த்துகள் குளிர்தழல் கவிதை அருமை தொடரட்டும் ..

Sabeekshana
10-08-2014, 04:49 PM
இயற்கையின் எழில் இழையோட கவிதை அழகாக இருக்கிறது!!

மரங்களை நடுவதால் பச்சை வீட்டு விளைவு மூலம் மழை பெய்கிறது என்பதையும் சுட்டுகிறது தமது கவி!!

வாழ்த்துக்கள்!!