PDA

View Full Version : பாரத சுதந்திரமும் எம் தமிழும்Sabeekshana
06-08-2014, 05:19 PM
http://www.lib.umn.edu/apps/ames/wi/w3ia14-l.jpgசுதந்திரத்துக்கு முன்னர்


ஆங்கிலத்தின் ஆட்சியில்
அடிமை விலங்குடன்
அரும் விடியல் தனை வேண்டி
கொடுமை புரிந்திட்டார்
கொற்றம் அடக்கிட
சற்றும் முயலாது
வக்கற்றவராய் வாழ்ந்த
வரலாறுகள் பற்பல!!

குட்டப்பட்டு குட்டப்பட்டு
குறுகிப்போன கழுத்துடன்
வெட்டப்பட்டு வெட்டப்பட்டு
வெறுமையான உறவுடன்
மண்டியிட்டு மண்டியிட்டு
மரத்து போன மனதுடன்
தட்டிக்கேட்க மறந்த
தலைமுறைகள் பற்பல!!

தேடல்கள் கனத்த
தேசாந்திரி வாழ்க்கை
தொலைந்த பாடில்லை எனும்
தொடர் சலிப்பில்
ஏனோ எம்மவர் ஆங்கிலத்தினையே
ஆலிங்கனம் செய்தனர்
எம் அமுத தமிழினை
அலட்சியம் செய்தனர்!!

மண்ணை அடகு வைத்து
மாயா ஜாலம் செய்வார் போல்
தன்னையே அண்டையார்
தாழ்களுக்கு விருந்தாக்கி
முன்னை நாட்களில் நாம்
முனைப்புடன் காத்த
அன்னை தமிழின் மகிமை
மறந்தோர் பற்பலர்!!
http://www.youthkiawaaz.com/wp-content/uploads/2012/08/inde-648x400.jpgசுதந்திரத்தின் பின்னர்
அரும்பாடு பட்டு
பெரும் பேறு அன்ன
சுதந்திர காற்றை
சுவாசிக்க தொடங்கினோம்
முகத்துதி பாடி வாழ்ந்த
முன்னை நாட்கள்
முற்றுப்பெற்றதாய்
முடிவே செய்திருந்தோம்!!

எனினும், வேட்டியும் சேலையும்
வெகுவாக கனக்க
டவுசரும் சேட்டும்
டாம்பீகமாய் தோன்ற
ஆங்கில வாடை எம்
அமுத மொழியை திரையிட
கலாச்சார சீரழிவுக்கு வித்திட்ட
கல்நெஞ்சத்தாரும் வாழ்ந்தனரே!!

வீசும் புயற்காற்றை
வினாடி வரை நின்றெதிர்த்து
பேசும் மொழியின்
பெருமையினை காப்போம் எனும்
சபதம் மறந்தோம் - தமிழுக்கு
சாவு மணி அடித்தோம்
ஆங்கில மோகத்துக்கு
அடிமையாய் ஆனோம்!!

கோவிலின் பொற்கலசம்
குடையோடு சாய்ந்து விழ
சாம்ராஜ்யங்கள் அடியோடு
சமர் களத்தில் சரிந்து விழ
தியாகமே வாழ்வான
மெழுகின் சுடர் அணைந்து விட
தமிழும் தன் மணம் மங்கி
மடிந்து போன நினைவுகள்!!

ஆயிரம் மொழி இங்கு வரினும்
அவையெல்லாம் ஈடோ எம் தமிழிற்கு
பாயிரம் எழுதி பயனில்லை கண்டீர்
தமிழ் பற்றை நாம் துறந்த பின்னர்!!
அண்டை நாட்டவர் மொழி இன்று- எம்
பண்டைத்தமிழினை பாழ் செய்வதா?
சண்டை செய்து இங்கு பயனொன்றில்லை
சங்கற்பம் பூண் எம் தமிழை காப்போம் என!!

கும்பகோணத்துப்பிள்ளை
07-08-2014, 11:24 PM
சந்தமுள்ள கவியாய்த்தமிழ் உணர்வு
சந்தனமாய் மணக்குதம்மா!

நாஞ்சில் த.க.ஜெய்
08-08-2014, 08:14 AM
மனிதர் மனதில் இவ்வெண்ணம் வரும் வரையில் மேம்பட போவதில்லை நம்மொழி.. மற்றொன்று தமிழ் மொழியின் பெருமை மற்றோர் அறிய தேவை அவர்கள் மொழி ,ஆனால் இன்றோ மொழியினை அறிவதற்காக படித்தவர்கள் மத்தியில் இம்மொழியின்றி உலகில் வெறோன்று மில்லை எனும் மாயை புகுந்தது வேதனை...தொடரட்டும் ...

கும்பகோணத்துப்பிள்ளை
08-08-2014, 08:47 AM
மனிதர் மனதில் இவ்வெண்ணம் வரும் வரையில் மேம்பட போவதில்லை நம்மொழி.. மற்றொன்று தமிழ் மொழியின் பெருமை மற்றோர் அறிய தேவை அவர்கள் மொழி ,ஆனால் இன்றோ மொழியினை அறிவதற்காக படித்தவர்கள் மத்தியில் இம்மொழியின்றி உலகில் வெறோன்று மில்லை எனும் மாயை புகுந்தது வேதனை...தொடரட்டும் ...

புகழ்ஏறி புவிமிசை பாரதி என்றும் இருக்கும் வரையில் வேதனையில்லை நன்பரே!
பேதமையுற்றோர் தெளிவடைவாரினி!
சிற்றுருவப்பெருஞ்சீனர்கள் போல்
தமிழைத்தமிழால் வளர்போமினி!

நாஞ்சில் த.க.ஜெய்
08-08-2014, 09:53 AM
புகழ்ஏறி புவிமிசை பாரதி என்றும் இருக்கும் வரையில் வேதனையில்லை நன்பரே!
பேதமையுற்றோர் தெளிவடைவாரினி!
சிற்றுருவப்பெருஞ்சீனர்கள் போல்
தமிழைத்தமிழால் வளர்போமினி!

ஆம் தமிழினை வள்ர்ப்போமினி ..நானும் உங்களுடன் .என்ன சிறிது சிரமம் பேச்சிலன்றி செயல்முறையில் பின் தொடர்வொமெனில்.

கும்பகோணத்துப்பிள்ளை
08-08-2014, 03:17 PM
ஆம் தமிழினை வள்ர்ப்போமினி ..நானும் உங்களுடன் .என்ன சிறிது சிரமம் பேச்சிலன்றி செயல்முறையில் பின் தொடர்வொமெனில்.

ஆம்!
இதுகாறும் தமிழில் பேசி பழகியிருந்தும் படிக்கப்பழகியிருந்தும் எழுதும் பழக்கமின்றி இருந்தேன். இந்தியாவிலிருந்து எனது தந்தையார் கடிதமெழுது கடிதமெழுது என்று சொன்னபொழுதெல்லாம், என்கடிதத்தில் எழுத்துப்பிழையிருந்தால் மிகவும் வருத்தமடைவார் என்றென்னி கடித்தில் கூட தமிழ் எழுதாதிருந்தேன். தமிழ்பழகவும், படிக்கவும் தமிழ்மன்றத்தில் இணைந்தேன். எத்தனையோ முறை எனது கணக்காய்வு மற்றும் தணிக்கை அறிக்கைகளை ஆங்கிலத்தில் பேசும் வேகத்தில் தட்டச்சு செய்யத்தெரிந்த எனக்கு தமிழில் தட்டச்சு செய்ய வாராதிருந்தது ஆனால் தமிழ் மன்றத்திலினைந்தபிறகு மனதில் நினைத்ததை தமிழில் தட்டச்சு செய்யும் பாக்கியம் கிடைத்தது.

முயற்சி செய்யும் இவ்வறிவுகூட நான் பெற்றது எங்கணமெனில் ஒரு முறை தணிக்கைக்காக தென் சூடான் சென்றிருந்தேன் ஒர் உணவகத்தில் உணவருந்திய போது ஒருவர் என்னருகில் நெருங்கி நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறிர்களா என்று கேட்டார் (ஆங்கிலத்தில்), இல்லை நான் துபாயிலிருந்து வருகிறேன் என்றேன். நான் இந்தியன்தான் தமிழ்நாடு என்றதும் அவரின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியேற்பட்டது பிறகு தெரிவித்தார் என்னுடைய முதாதயர்கள் தமிழர்கள் சில தலைமுறைகள் கடந்தபின்பு தமிழ் எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது ஆனால் எங்கள் பூசையறையில் ஒரு புத்தகமிருக்கிறது அதன் பெயர் திருக்குறள் என்றார். அவர் பெயர் என்ன? எங்கே இருக்கிறார் என்ற விபரங்கள் கூட கேட்டுவைக்கத்தோனாமல் போய்விட்டது ஆனால் அது எனது மனதில் இருவேறு விதமான என்னங்களை உருவாக்கியது. 1. இதுபோல் உலகமெங்கும் எத்தனை தமிழ்வேர்களில் பூக்களாய் தமிழ் நூல்கள், புலம்பெயர்ந்து தலைமுறைகள் மாற்றியிருந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் - தமிழ் எந்நாளும் சாகாததென்பதற்கு இதுவும் சான்றுதான் 2. தாய்மொழி, புலம் பெயர்ந்தாலும் (ஏன் இந்திய மற்றும் தமிழ் நாட்டின் பெருநகரங்களில் வாழ்பவர்களால் கூட) பின்வரும் தலைமுறைகளுக்கு தமிழல் பேசுவதும், படிப்பதுவும், எழுதுவதும் கற்றுத்தரப்பட வேண்டும்.

வேர்களில் நீருற்றுங்கள் தமிழ் தானாக வளரும்.

தமிழாக்கங்கள், தமிழ்படுத்தப்பட்டகணனிகள் என (சீனர்கள் போல்) இண்ணமும் உரமிட்டால் தமிழ் இண்ணமும் செழித்து வளராதா!

எனது குழந்தைகளுக்கு பிறமொழிக்கல்வியினூடே தமிழ் படிக்கவும், எழுதவும், பாடல்களை மனனம் செய்யவும், தமிழ் நூல்களை பாதுகாக்கும் பழக்கத்தையும் உருவாக்கி (வெறியேற்றாமல்) அது நம் குடும்பக்கடமையென பணித்தால் என் வழித்தலைமுறையூடே தமிழ் பல்கும்.

அதற்க்கு என் பின்வரும் தலைமுறைக்கு நான் எனது தாய்மொழியை திரியேற்றி வைக்க எனக்கு இப்பழக்கங்கள் கைவரப்பெறவேண்டும். இதுவும் தமிழ் வளர்க்கும் பணியின் ஒருசெயல்விழை என்றே கருதுகிறேன்.

இது என் சூழ்நிலைக்கேற்ற செயல்முறை என நான் கருதுகிறேன்.

நான் கருதுகிறபடி எனது எழுத்துதிறமை வளரப்பெற்றால் என் வாழ்நாளில் மிச்சமிருக்கும் நாட்களில் தமிழ் மொழிக்கு ஒரு கல்லேனும் நகர்த்திவைப்பேன்!


இணைய உறவுகளுக்கு ஓர் விண்னப்பம். நான் எழுதும் எழுத்துகளில் பிழைகளிருந்தால் (எழுத்துப்பிழை) எடுத்துக்கூறி தடுத்தாட்கொள்ளவும்.

Sabeekshana
09-08-2014, 01:01 PM
நன்றி ஜெய் மற்றும் பிள்ளை அவர்களே!!

"சாகையிலும் தமிழ் படித்து சாக வேண்டும்

நம் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்"

என்றவாறு தமிழ் எம்முடன் இரண்டற கலக்க வேண்டும்.

Sabeekshana
16-08-2014, 07:12 AM
சுதந்திர தினத்தின் மறு நாள் இத்தலைப்பை நினைவு கூறுதல் சால சிறந்தது.

அனுராகவன்
16-08-2014, 07:13 AM
நன்றி ..நானும் நினைவுக்கூறுகிறேன்...
நேற்றே நான் படித்தேன்...

Sabeekshana
16-08-2014, 07:20 AM
மிக்க நன்றி அச்சலா. :)