PDA

View Full Version : விடிவின்றி

நாஞ்சில் த.க.ஜெய்
03-08-2014, 06:01 PM
விடிவின்றி....

உணர்வுகளின் நுணுக்கத்தில் எனை மறந்தேன்

மறந்துவிட்ட உணர்வுகளில் மரத்துவிட்டேன்

உயிர்த்தெழும் காமத்தில் எனை இழக்கின்றேன்

நேற்றும் முற்றில்லை இன்றும் முற்றில்லை

முற்றற்ற உணர்வு கொந்தளிப்பில் நான்

ஓர் அவதி விடிவின்றி

தொடர்கிறது மீண்டும் மீண்டும் ..

dellas
04-08-2014, 06:56 AM
முடிவுறாமல் இருப்பதே நலம்.

நம்மை நாம் என்று உணர வைப்பதே அந்த உணர்வு கொந்தளிப்புதான்.

கும்பகோணத்துப்பிள்ளை
04-08-2014, 08:02 AM
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,அடியோர் மைந்தர் அகலத்து அகலாஅலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்சிறப்பிற்றே தண் பரங்குன்று.

என்ற பரிபாடலுக்கு ஒப்பாகிறது உங்கள் கவிதை நாஞ்சிலாரே!

Sabeekshana
04-08-2014, 01:41 PM
மனிதனின் சில உணர்வுகள் மற்றும் சிந்தனைகள் உடலில் உள்ள ஓமோன்களின் அளவினால் ஆளப்படுகிறது.

இவற்றின் அளவில் வீழ்ச்சி ஏற்படும் போது தாம் அதிலிருத்து தாமாகவே விடுதலை பெறுவீர்.

நன்றி தங்களது கவிக்கு!!

நாஞ்சில் த.க.ஜெய்
08-08-2014, 08:43 AM
முடிவுறாமல் இருப்பதே நலம்.

நம்மை நாம் என்று உணர வைப்பதே அந்த உணர்வு கொந்தளிப்புதான்.

உறங்காமல் இருப்பது கேடென்பது புரிகிறது.என்ன செய்வது இரவு பணி அவ்வாறு தான் அமைகிறது ..வாழ்த்துகளுக்கு நன்றி டெல்லாஸ்.

நாஞ்சில் த.க.ஜெய்
08-08-2014, 08:44 AM
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,அடியோர் மைந்தர் அகலத்து அகலாஅலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்சிறப்பிற்றே தண் பரங்குன்று.

என்ற பரிபாடலுக்கு ஒப்பாகிறது உங்கள் கவிதை நாஞ்சிலாரே!

கவிதைக்கும் பரிபாடலுக்கும் ஒப்புமை கூறி என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டீர் .மிக்க நன்றி பிள்ளை அவர்களே!

நாஞ்சில் த.க.ஜெய்
08-08-2014, 08:48 AM
மனிதனின் சில உணர்வுகள் மற்றும் சிந்தனைகள் உடலில் உள்ள ஓமோன்களின் அளவினால் ஆளப்படுகிறது.

இவற்றின் அளவில் வீழ்ச்சி ஏற்படும் போது தாம் அதிலிருத்து தாமாகவே விடுதலை பெறுவீர்.

நன்றி தங்களது கவிக்கு!!

மருத்துவ பதிலுடன் கூடிய வாழ்த்துக்கு மிக்க நன்றி சபீக்ஷ்னா..

M.Jagadeesan
09-08-2014, 08:23 AM
உறங்கும் காமத்தை உயிர்த்தெழ வைப்பதுவும்
...உயிர்த்தெழும் காமத்தை உறங்க வைப்பதுவும்
மறவாது செய்கின்ற மனிதனின் வாழ்க்கையிலே
...மண்டும் இன்பங்கள் கோடானு கோடி
துறவியின் வாழ்விலே துன்பம் அண்டாது
...துறவுக்கு வழிகாட்டி புத்தன் துறவாகும்
பிறவியில் உயர்ந்தது மனிதப் பிறவியே !
..பிறக்குமே விடிவொன்று துறக்கப் பழகினால் !

சிந்தனையைக் கிளறும் கவிதை தந்த ஜெய்க்கு நன்றி .

நாஞ்சில் த.க.ஜெய்
10-08-2014, 02:35 PM
கவிதையினூடே சிந்தை கிளரும் பதிலுரையிட்ட ஜகதீசன் ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்..