PDA

View Full Version : என் மனைவி



manivannan samikkannu
02-08-2014, 12:29 PM
உலகில் எத்தனைப்பேருக்கு என் மனைவி .....
போன்று அமைவார்கள் என்று தெரியவில்லை ...!!!!

என் சிறு விழியன் அசைவில் கோவம் கண்டு .....
என் ஒரு வரி பதிலில் அர்த்தம் கொள்வாள் .......!!!!!!

உறவினர்கள் ஓராயிரம் கதை சொன்னாலும் ....
அவள் உள்ளம் என்னிடம் மட்டுமே ....!!!!!

வாழ்க்கையில் பலக்கோடிகள் கிடைத்தாலும் ....
என்றுமே என் வாழ்வின் பெரிய சொத்து ....
அவள் என் மீது கொண்ட காதல் பாசம் நம்பிக்கை .....!!!!!

கனவில் கண்ட தேவதையாக .....
இவளைக்கண்டேன் என் நிஜ வாழ்வில் ....!!!!!

பட்டிக்காட்டான் என்று தெரிந்தும் ....
அவள் பார்வை என் மீது பட எத்தனை யுகங்கள் ...
தவம் கொண்டேனோ .....!!!!!!!!!
உலகம் சிறிது இவள் அன்பிற்கு முன்னால் ....!!!!

நாஞ்சில் த.க.ஜெய்
03-08-2014, 01:24 PM
சிற்சில பிழைகளை தவிர்த்து பார்க்கையில் கவிதை உரைநடை போல் தெரிகிறது. ...தொடரட்டும் வாழ்த்துகள்..

Sabeekshana
03-08-2014, 01:52 PM
எளிமையான கவிதை!!

உங்கள் மனைவி மீது நீங்கள் கொண்ட அன்பு தெட்டத்தெளிவாக புலப்படுகிறது.

வாழ்த்துக்கள் தோழரே.

அமரன்
03-08-2014, 01:55 PM
நல்ல கவிதை..

இப்படித்தான் என்னவளும் இருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்க எவரும் முயலாதவரை.

manivannan samikkannu
03-08-2014, 05:12 PM
உங்கள் அனைவரின் பாராட்டுக்கு நன்றி ..........உங்களுடைய பாராட்டுதலே என்னை மென்மேலும் ....உற்சாகப்படுத்துகிறது ......

கும்பகோணத்துப்பிள்ளை
04-08-2014, 08:59 AM
அந்த எத்தனைபேரில் நானும் ஒருவன்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!.... மிகையில்லை
நல்ல பிரதிபலிப்பு!

கீதம்
06-08-2014, 01:12 AM
அன்பும் புரிதலுமான மனைவி வாய்த்திருப்பது வாழ்க்கையின்பம்!

அவ்வன்பையும் புரிதலையும் உணர்ந்து வாழ்த்தும் கணவன் வாய்த்திருப்பது இருமடங்கு இன்பம்!

ஆத்மார்த்தமான வாழ்த்துகள் இருவருக்கும்.

அனுராகவன்
16-08-2014, 04:48 PM
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்..

கவிதை மிக அழகு

ravisekar
19-05-2015, 12:02 AM
உணர்வுகளின் யதார்த்த் பரிமாறல். பாராட்டுக்கள் நண்பரே.