PDA

View Full Version : பெண் மனதில் காதல்!!



Sabeekshana
02-08-2014, 07:09 AM
http://img33.imageshack.us/img33/3138/89806276.png

சமுத்திரத்தில் விழுந்த மழைத்துளி- நீரில்
சலனமின்றி சங்கமித்தது
பெண் மனதில் காதல்!!

பூரண நிலவில் ஆங்கே புள்ளிகள் தோன்றி
புதுக்கோலம் பிறந்திற்று
பெண் மனதில் காதல்!!

கண்ணாளன் விழி காண மொழி மறந்து
வழி தேடும் வலிகள்
பெண் மனதில் காதல்!!

மெட்டில்லாப்பாடல் மெல்லிசையாய்- ஒரு
துட்டில்லா மனிதன் துரையாக!!
பெண் மனதில் காதல்!!

வரண்ட காற்றும் வாழ்வில்
பெரு வசந்தம் தந்திற்று
பெண் மனதில் காதல்!!

மொட்டவிழ்ந்த மலரொன்று
வண்டின் மொழிக்காக ஏங்கிற்று
பெண் மனதில் காதல்!!

அவனுக்காய் ஒப்பந்தமான ஒன்றாய்
நிதம் மனதுள் நிர்ப்பந்தம்
பெண் மனதில் காதல்!!

ஆழ் கடலின் ஆர்ப்பரிப்பு
ஒரு ஆழிப்பேரலையாக- இதயத்தில்
பெண் மனதில் காதல்!!

தேகமெங்கும் மின்னல் வெட்டு
அவன் மின்சார கண்களினால்
பெண் மனதில் காதல்!!

"பொல பொல" என கண்ணீர்
பொங்கி வீழ்தலும் ஒரு சுகமாய்
பெண் மனதில் காதல்!!

நாஞ்சில் த.க.ஜெய்
03-08-2014, 01:18 PM
வழி தேடும் வலிகள்

இந்த ஒரு வரி மட்டும் முரண்பட்டு நிற்பது போல் தெரிகிறது ..இதனை தவிர்த்து பார்த்தால் பெண்ணின் உளபூர்வ காதல் தங்கள் கவிதை வரிகளில் ..தொடரட்டும் ..

Sabeekshana
03-08-2014, 01:44 PM
ஜெய் அவர்களே

ஒரு பெண் தனது காதலனை கண்டதும் பேசும் மொழி அறியாது அங்கிருந்து அகன்று வேறோர் பாதை நோக்கி செல்ல அவளுள் தோன்றும் ஒரு உள்ளத்தின் வலியை எடுத்துகூற விளைந்தேன்.

நன்றி கருத்துக்கு

கீதம்
06-08-2014, 01:15 AM
காதல் கொண்ட பெண்மனத்தின் தயக்கங்களையும் தடுமாற்றங்களையும் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மிக அழகாகச் சொல்லிப்போகின்றன கவி வரிகள். பாராட்டுகள் சபீக்ஷனா.

Sabeekshana
06-08-2014, 03:42 PM
தங்கள் பாராட்டுக்கு நன்றி கீதம் அவர்களே!!

கும்பகோணத்துப்பிள்ளை
07-08-2014, 08:16 PM
மெல்லியளாள் காதல் இது
மெல்லியியல் காதல் ஆனாலும்
வல்லிய காதல்!

அனுராகவன்
16-08-2014, 04:23 PM
அழகான கவி...பாராட்டுக்கள்..தொடருங்கள்..