PDA

View Full Version : புரியுதுங்களா?



dellas
31-07-2014, 01:05 PM
எல்லாருக்கும் இனிப்பு வழங்கிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு இன்றைக்கு சந்தோசமான துக்கநாள். என்ன உளறுகிறேனா? நான் அப்படித்தாங்க. எப்பவும் எதையாவது செய்துகொண்டிருப்பேன். அல்லது பேசிக்கொண்டு இருப்பேன். வேலைக்கு போனாலும் அப்படித்தான். என்வேலை என்று எதுவும் இல்லை, எல்லார் வேலையும் என் வேலையாக நினைத்துதான் செய்வேன். என்மட்டில் அது உதவி. ஆனால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு பலர் என்னிடம் வேலை வாங்குவதுண்டு. சிலவேளைகளில் அது புரிந்தும், பல வேளைகளில் அது புரியாமலும் செய்வேன். ஆனால் யார் வம்பு தும்புக்கும் போறது இல்லைங்க. நான் பேசுவது கேட்டு எல்லாரும் சிரிப்பதுண்டு. சிலர் சிரிப்பதற்காகவே என்னிடம் பேச்சு கொடுப்பதும் உண்டு.

அட என்னடா இவன் எதற்கு இனிப்பு கொடுக்கிறான் என்பதை சொல்லாமல் வேறு என்னமோ பினாத்துகிறான் என்று தோன்றுகிறதா. சொல்றேங்க அத சொல்லத்தானே வந்தேன். கடைக்காரன் இந்த இனிப்பிற்கு அதிகமாக பணம் பிடுங்கிவிட்டான். அவனுக்கும் என்னைப்பற்றி தெரிந்து இருக்குமோ? பின்னே இனிப்பு வாங்கியவர்கள் யாரும் " என்னப்பா என்ன விசேசம்" என்று தானே கேட்கிறார்கள் யாரும் 'இனிப்பு நல்லாயிருக்குன்னு' சொல்லலியே.அட போங்க என்னங்க பெரிய காசு, பணம் என்கிட்டே இல்லாததா? என் தாத்தா அந்த காலத்திலேயே பெரிய மச்சு வீடும் ஐநூறு ஏக்கராவுக்கு மேல பூமியும் வட்சிருந்தாருங்க. அப்பாவிற்கு அப்புறம் அது அனைத்தும் எனக்குத்தானே வரப்பகுது. அப்போ எல்லா பணமும் எனக்குத்தானே. பின்ன எதுக்குங்க நான் வேலைக்கு போகணும் ? ஆனா இது எங்க அப்பாவுக்கு புரியலங்க நான் தட்டுத் தடுமாறி பன்னிரண்டாவது படிக்கும் போதே அவர் சொல்லுவார்

" லே மவனே இங்க பாருடா ஆம்பளைய ஒழுங்கா ஒரு வேலையைத் தேடிக்கோ. இல்ல ஒருத்தனும் ஒனக்கு பொண்ணு கொடுக்கமாட்டான். அதுக்கு நீ நல்ல படிக்கனுண்டா என்ன புரியுதா?"

அப்போதைக்கு நான் 'ஆமாம் ' என்று தலையாட்டி வைத்தேன்

ஆனால் ராத்திரிக்கு ஒரு யோசனை. 'தாத்தா எங்க போய் படிச்சார். அப்பா பள்ளிக்கொடம் பக்கம் போனதே இல்லையே இவங்களுக்கு எல்லாம் பொண்ணு கிடைச்சுருக்கே அப்போ எனக்கு மட்டும் என்னவாம். இப்படி செய்தால் என்ன ? பேசாமல் நாமளே ஒரு பொண்ணைப் பார்த்து விட்டால். யாரிடமும் போய் கேட்க வேண்டாமே. உடனே எனக்கு ஒன்பதாவது படிக்கும் வாசுகி தான் நினைவிற்கு வந்தாள்.

மறுநாளைக்கே அவளிடம் கேட்டேன். ஆனால் என்னமோ தெரியவில்லை அவள் என்னை பார்த்து முறைத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் தலைமையாசிரியர் என்னை அழைத்து இது போல காரியங்கள் மீண்டும் செய்தால் பள்ளியைவிட்டு நீக்கிவிடுவதாக 'அடித்து' கூறினார். ஒழுங்காக படித்து ஒரு வேலைக்குப்போக வேண்டுமாம். அப்போ வாசுகியை என்ன செய்ய?

அதற்கு என் ஆருயிர் நண்பன் ஒருவன் அமர்களமான ஒரு யோசனை சொன்னான். இப்போது வாசுகியை காதலிக்க வேண்டுமாம். வேலைக்கு போனபின் கல்யாணம். ஓ செய்யலாமே ஆமாம் எப்படி காதலிப்பது? அது வேற ஒன்னும் இல்லையாம். அவள் பின்னாலே போகணும் வரணும் அவ்வளவு தான். அட அந்த கர்மத்தைதான் அவள் பள்ளிக்கூடம் முடித்து கல்லூரி இறுதியாண்டு வரை செய்து விட்டேன். எனக்கு யார் யாரோ சிபாரிசு செய்து ஒரு வேலையும் கிடைத்தது. இதுவரை அவள் என்னை கல்யாணம் செய்வதாக சொல்லவில்லை. அவளுக்கு பின் நடந்து இன்றோடு சரியாக ஏழு ஆண்டுகள் முடிகிறது. அதை விமரிசையாக கொண்டாடத்தான் இந்த இனிப்பு. இப்போது சொல்லிவிட்டேன் . இன்னும் ஒன்னு சொல்கிறேன். இனிமேல் அவளை நான் பின்தொடர போவதில்லை. எனக்கும் தன்மானம் உண்டுங்க. நானும் ஆம்பிளைதான்.

அப்பாடா நேற்று இரவு நல்ல தூக்கம். ஏண்ணா நேற்று வாசுகி பின்னால் போகல்ல, அதனால எவ்வளவு நேரம் மிச்சம். நல்ல விளையாட்டு. இரவு ஒரு குளியல். ஆகா இனிமேல் இப்படித்தான் இருக்க வேண்டும். சீக்கிரம் நேரமாச்சு, வேகமாக நடக்கிறேன். அது யாரு நம்ம வாசுகி. ம்ஹூம் . இவளை பார்த்துக்கொண்டு இனிமேல் நிற்க முடியாது. என்ன இது? இவள் குறுக்காக வந்து நிற்கிறாள்.

" இங்க பாரு வாசுகி, ஏன் வழியை மறிக்கிற நான்தான் நேற்று உன் பின்னாடி வரல்லியே இனிமேல் வரவும் மாட்டேன்."

" அதுதான் ஏன்னு கேக்கலாம்னு வந்தேன்."

" அது. நீதான் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலையே "

" ஒழுங்கு மரியாதையா வீட்டுல வந்து பொண்ணு கேளுங்க "

" நா..நான் எதுக்கு கேக்கணும்?"

" ஆ மூஞ்சி.. நேத்திக்குதான் ஒருத்தன் வந்து என்னைய பொண்ணு பாத்துட்டு போனான். "

" அப்ப அவனையே கட்டிக்க"

"அய்ய ஆளப்பாரு, அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கத்தான் ஏழு வருஷம் என் பின்னால வந்தீங்களாக்கும்"

" உனக்குத்தான் என்னையே பிடிக்கலையே"

" பொண்ணு கேக்க போறீங்களா இல்லையா "

"சரி"

பின் குறிப்பு : அந்த ஏழு ஆண்டுகள்தான் என் வாழ்நாளின் வசந்த காலம். "சரி" என்று அன்று தொடங்கியது. இதுவரை 'இல்லை' என்று பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அலுவலகத்தில் யாருடைய வேலையே செய்வதற்கும் எனக்கு நேரமில்லை. ஏன்னா வீட்டுலையே ....புரியுதுங்களா?

கும்பகோணத்துப்பிள்ளை
01-08-2014, 10:28 AM
அது சரி! கெஞ்சுனா மிஞ்சுவாங்க!
மிஞ்சுனா கெஞ்சுவாங்க! புரியுதுங்கோய்!
கொஞ்சமிருங்க!.... வீட்டுல கூப்பிடுறாங்க!
என்னனு கேட்டுட்டு வாரேன்!... இல்ல இல்ல செஞ்சிகொடுத்துட்டு வாரேன்!

நாஞ்சில் த.க.ஜெய்
01-08-2014, 04:09 PM
அந்த பெண்மணியின் சிந்தனை என்னுள் ஓடுகிறது .ஏழு வருடத்திற்கு முன்


நேத்திக்கு வந்தவன் நம்மள அடிமையாக்கி வேலை வாங்கிடுவான் .பேசாம நமக்குன்னு ஒரு அடிமை கொஞ்ச காலமா நம்மளை சுத்திக்கிட்டு இருக்குதே அத கட்டுனா நமக்கு அடிமையா என்னைக்கும் ஆக்கி போடும் ...


ஏழு வருடத்திற்கு பிறகு


நம்மள நாம தான் மெச்சிடனும் நான் நினைச்ச மாதிரியே நல்ல வேலபாக்குது .இத ஆய்சுக்கும் நல்ல வச்சுகிடனும் ...


இது என் கருத்து :


ஆனா டெல்லாஸ் உண்மையிலே தங்களுக்கு என் பாராட்டுக்கள் ..பின்ன யாரும் துணியாத செயல் இது ...தொடர்ந்து செய்யுங்கள் மற்றொன்று மேற்கூறிய வார்த்தைகள் முழுக்க நகைசுவைக்காக ..தவறாக எண்ண வேண்டாம் எமக்கு அனுபவம் கிடையாது..

dellas
04-08-2014, 05:47 AM
பிள்ளை அவர்களே,
ஒன்னும் அவசரமில்லை. துணி மணியெல்லாம் துவைச்சு காயப்போட்டு மெதுவா வந்தாப் போதும்.

ஜெய் அவர்களே,

அனுபவப்பட்டவன் சொன்னா கேட்டுக்கணும். (மெதுவாக) வெளியில கிளியில சொல்லிப்புடதீங்க. நமக்குன்னு ஒரு கௌரத இருக்குல்ல.

கும்பகோணத்துப்பிள்ளை
04-08-2014, 06:01 AM
பிள்ளை அவர்களே,
ஒன்னும் அவசரமில்லை. துணி மணியெல்லாம் துவைச்சு காயப்போட்டு மெதுவா வந்தாப் போதும்.


பராவில்லையே! ஒரு அனுபத்திலே டக்குன்னு புரிஞ்சுனுட்டேள்
நம்மாத்திலே அதெல்லாம் சல்லிசான காரியம்! இன்னமும் இருக்கே!
நீங்களும் போக போக புரிஞ்சிப்பேள்!

dellas
04-08-2014, 06:37 AM
பராவில்லையே! ஒரு அனுபத்திலே டக்குன்னு புரிஞ்சுனுட்டேள்
நம்மாத்திலே அதெல்லாம் சல்லிசான காரியம்! இன்னமும் இருக்கே!
நீங்களும் போக போக புரிஞ்சிப்பேள்!

ஒரு ஆம்பிள மனசு ஆம்பிளைக்குதான் தெரியும்.

முரளி
04-08-2014, 07:38 AM
நல்ல கருத்து, வாழ்த்துக்கள் டல்லஸ். "Smile... tomorrow will be worse. " இது எனது அனுபவம் ...

dellas
04-08-2014, 07:56 AM
நன்றி.

அனுராகவன்
16-08-2014, 06:17 AM
மிக அருமையான கதை

dellas
17-08-2014, 09:47 AM
பாராட்டுதலுக்கு நன்றிகள்

aren
09-01-2015, 08:53 AM
தெரிந்த இளிச்சவாயன் அருகிலேயே இருக்கும்போது எதுக்கு தெரியாத இளிச்சவாயனைத் தேடி பிடிக்கவேண்டும். அதனால் தான் அவள் அவனை வீட்டிற்கு வந்து பெண் கேட்கச்சொல்லுகிறாள். சொம்பவும் விவரமானவள்தான் அவள்.

கதை அழகாக வந்திருக்கிறது. இன்னும் நிறைய எழுதுங்கள்.

aren
09-01-2015, 08:53 AM
தெரிந்த இளிச்சவாயன் அருகிலேயே இருக்கும்போது எதுக்கு தெரியாத இளிச்சவாயனைத் தேடி பிடிக்கவேண்டும். அதனால் தான் அவள் அவனை வீட்டிற்கு வந்து பெண் கேட்கச்சொல்லுகிறாள். சொம்பவும் விவரமானவள்தான் அவள்.

கதை அழகாக வந்திருக்கிறது. இன்னும் நிறைய எழுதுங்கள்.

dellas
11-01-2015, 01:08 PM
நாட்கள் பலவாகிவிட்டது, உங்கள் பின்னூட்டம் கண்டு.

leomohan
12-01-2015, 06:33 AM
காதலானவே இருந்துவிட்டு வீரனாக இருப்பதா அல்லது காதலில் வெற்றி பெற்று கணவனான பின்பு கோழையாக இருப்பதா. இது தான் பிரச்சனை. சண்டையின்னு வந்தாலே வெற்றி தோல்வின்னு முடிவு வரனுமே. டிரா என்பது இந்த ஆட்டத்தில் இல்லை. கதை நன்றாக இருந்தது. :-) வாழ்த்துகள்.

dellas
13-01-2015, 05:27 AM
இரண்டே வரிகளில் கதை சொல்லிவிட்டீர்கள். ஆமா. அதுதான் பிரச்னை.
.நன்றி.