PDA

View Full Version : தமிழ்த்தாய் என்னுடன் பேசினாள்Sabeekshana
25-07-2014, 01:20 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/01550/TH14-OPED-ARTISTS__1550394f.jpg


தமிழ்த்தாய் எனைப்பார்த்து கேட்டாள்
"நீ ஏன் இன்னும் உன்னை தமிழ்ப்பெண் என்கிறாய்?" என்று

தயக்கமுடன் நான் பகர்ந்தேன்
"தமிழை நான் என்றும் பேசுவதால் என்று!!"

சட்டென அவள் உதட்டில் ஒரு கேலி சிரிப்பு
பட்டென அடுத்த வினாவினை தொடுத்தாள்.

"தூய தமிழை நீ என்றாவது
வாயாற பேசியது உண்டா பெண்ணே ?"

"தமிழ் நாட்டு மண்ணில் இன்று இங்கிலீசு இல்லை என்றால்
இல்லை ஒரு வாழ்க்கை அம்மா"

பதில் சொல்லிய வண்ணம் தமிழ் தாயையே பார்த்தேன்
அவள் கண்களில் தென்பட்ட காயத்தையும் தான்

தாயின் சினத்தீயும் சீறி பாயவே
மீண்டும் எனை பார்த்து கேட்டாள்

"எதனை நீ செய்தாய் உன் உயிர் தமிழர் வாழ
இந்த வையகத்தில்??" என்று...

"நான் தமிழ்க்கவி செய்தேன்; தமிழில் அனைத்தும் இயம்பினேன்;
அற்ற தமிழருக்கு உற்ற உதவி புரிந்தேன்"

என்று நான் விடை கூற இடைநடுவே என்னை
நிறுத்தினாள் என் தமிழ்த்தாய்

"2009 தனில் உனதருமை 50, 000 தமிழர்
ஈழ தேசத்தில் துடி துடித்து மாய்ந்தனரே..."

....வீறு கொண்ட உன் தமிழ் உணர்வு அவர்களுக்கு
விடி வெள்ளி காட்ட மறந்ததேன்?" என்றே வினவினாள்.

என் கண்ணில் பெருகிய கண்ணீர் ஒருபுறம்;
எம் மண்ணை நாம் தொலைத்த வேதனை மறுபுறம்;

"தாயே அது விதி செய்த மாயம்" என்றேன் - "மற்றும்
சதி செய்தார் சிங்களவர் " என்றேன்

குறுக்கிட்டாள் தாய் , "எனில் நீ செய்தது என்ன?"
உன் தொப்பூழ் கொடி உறவு காக்க ஏன் மறந்தாய்" என்றாள்

உதிர்ந்தேன் எனது ஆதங்கத்தை , "குமரி எனும் தமிழர் பூமியினை
குற்றுயிர் பெற்று ஆழியினுள் வீழ வைத்தது யார் தவறு தாயே?"

"தமிழ் காவியங்கள் பல செய்து வண்ண ஓவியர் என்ற பெயர் கொண்ட
தமிழரை தகர்த்தது அவ்விறைவனே" என சாடினேன்

"மூத்த மொழி எமது தமிழ் என இன்றும் நான் மார்பு தட்டி கொள்கிறேன்
ஆனால் மேற்குலக வாசிகள் எமை மதிப்பாரில்லை"

"புராதன மொழி அறிந்தவள் என்று மேற்குலகில் என்றும்
புதிய தொழில்கள் தருவாரில்லை"

"சர்வதேச மொழியே இன்று சர்வமாய் திகழ்கிறது
எனில் எனதுயிர் மூத்த தமிழ் வியாபகம் அடையாததேன்?"

"உன் கேள்விகளை நீயோ கேட்டு விட்டாய்- ஆனால் என்னுள்
இவ்வினாக்கள் என்றென்றும் ஆறாத ரணங்களாய்..." என்றேன்.

வேடிக்கையாகவே என்னை சிறு கணம் பார்த்தாள்
வேறேதும் பேசாமலே சென்றுவிட்டாள் என் உயிர்த்தாய்

Sabeekshana
26-07-2014, 05:51 PM
எமது கவிகளை வாசிப்பதற்கு இங்கு யாரும் இல்லையா? ஆக குறைந்தது அதில் உள்ள குறைகளை எடுத்து கூறுவதற்கு?

மிக்க ஏமாற்றம் அடைகிறேன் தோழர்களே!!

How sad that there are no one to read the poems!!

At least to point out the shortcomings!! My gosh this is disappointing!!

M.Jagadeesan
27-07-2014, 05:52 AM
தோழியே ! உம்கவிதை வாசித்தேன் என்மனதில்
... தோன்றுகின்ற எண்ணமதை செப்புகிறேன் கேட்பாயே !
பூழியர்கோன் வெப்பொழித்த புண்ணிய தமிழ்மொழியை
...புனல்வாதம் அனல்வாதம் வென்ற தமிழ்மொழியை
ஆழியே இடம்மாறி பூமிக்குள் வந்தாலும்
...அழிக்க முடியாது என்பதை அறிந்திடுவீர் !
ஈழத்துத் தமிழர்களின் இன்னல் களைந்திடவே
...இருக்கின்ற உபாயமதை சொல்கின்றேன் கேட்பாயே !

சிங்கத்தின் பிடரிதனை இழுக்கின்ற சிறுநரிபோல்
...சிங்களவர் நம்மைச் சீண்டிப் பார்க்கின்றார்
தங்கு தடையின்றி மீன்பிடிக்க முடியாமல்
...தவிக்கின்ற நம்மக்கள் துயரம் களைந்திடவே
பொங்கி எழுந்திடுவோம் ! போருக்குப் புறப்படுவோம் !
...பொல்லாங்கு செய்வோர்க்குப் பாடம் புகட்டிடுவோம் !
வங்க தேசத்தை அன்றொருநாள் மீட்டதுபோல்
...வளமார் இலங்கைதனைப் போரிட்டு வென்றிடுவோம் !

அன்புள்ள தோழியே மெச்சினேன் உம்கவியை
... ஆனாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள் கூறிடுவேன்
என்னதான் வார்த்தைகள் எடுப்பாக இருந்தாலும்
...எதுகை மோனையுடன் கவிவடிவம் பெறுமானால்
பொன்கட்டி ஒன்று ஆபரணம் ஆனதுபோல்
...போற்றிப் புகழ்ந்திடுமே இவ்வுலகு அறிந்திடுவீர் !
என்மனதில் தோன்றிய எண்ணமதை வெளியிட்டேன்
..ஏற்பதுவும் தள்ளுவதும் உம்முடைய கடனாகும் .

Sabeekshana
27-07-2014, 09:56 AM
சிறியவள் கவியை சிந்தைக்கு விருந்தாக்கிய
சீர் மிகு கவிகோக்கு என் சிரம் தாழ்த்தி ....................
அறிவில் பெரியவர் தாம் ஆய்ந்து கூறிய
அத்தனை குறை நிறைகளையும் நான் ஏற்று
செறிவு கொண்ட உம் தமிழ் திறம்
செவ்வானில் சுடர் போல என்றும் ஜொலிக்க
பரிவு கொண்ட இவிளங்கோதை தன
பாராட்டுகளை தெரிவிக்கிறாள்

வெருண்டோடிய புள்ளி மான்
வேடன் வலையில் சிக்கியது போல்
அருண்ட இரு விழியினுள் செறிந்த
அமிலத்தை தெளித்தாற் போல்
திரண்ட எம் தமிழர் குலாம்
திக்கு அறியாது மாய்ந்தனரே
உருண்டோடும் காலம் எல்லாம்
உள்ளமதில் இனி இர்ரணமே !!

வேல் கொண்டு பகைவர் சிரம் சாய்க்க
வெற்றி திருவேள் வருவானா? இல்லை அவர்
தாழ் பணியும் நிலையினை
தானிங்கு எமக்கு தருவானா
மேலான சிங்களவர் என்று இன்று
மேதினியோரும் கூறிடுவார் எனில்
தோல் கொடுத்து எம்மினத்தின்
தோதான புகழ் காக்க இனி யார் உள்ளார் ?

பேச்சினில் போர் தொடுத்து நாம்
பெற்றது தான் என்ன ? அறிவு
வீச்சினில் நாம் சிறந்தும் அவரிடம்
வீழ்ந்தது தான் ஏனோ? கோல்
ஓச்சும் தமிழ் ஈழத்தில் என்ற
கொங்கு தமிழ் முழக்கம் எல்லாம்
பாய்ச்சிய அவர் கணைகளுக்கு
பணிந்தது தான் ஏனோ ?


ஆழியும் கூட அழிக்க முடியா
அளப்பெரும் எம் தமிழ் தாய்
மூழி கொண்டு அன்று கயவர்
மூடிடுகையில் என் செய்தாள்?
வாழி தமிழ் மொழி என இன்றும்
வாயாற பாடுகிறான் - பெரும்
தாழியினுள் என்னை பகைவர்
இன்று தள்ளி விட்ட போதும் !!

Sabeekshana
27-07-2014, 09:57 AM
சிறியவள் கவியை சிந்தைக்கு விருந்தாக்கிய
சீர் மிகு கவிகோக்கு என் சிரம் தாழ்த்தி ....................
அறிவில் பெரியவர் தாம் ஆய்ந்து கூறிய
அத்தனை குறை நிறைகளையும் நான் ஏற்று
செறிவு கொண்ட உம் தமிழ் திறம்
செவ்வானில் சுடர் போல என்றும் ஜொலிக்க
பரிவு கொண்ட இவ்விளங்கோதை தன்
பாராட்டுகளை தெரிவிக்கிறாள்

வெருண்டோடிய புள்ளி மான்
வேடன் வலையில் சிக்கியது போல்
அருண்ட இரு விழியினுள் செறிந்த
அமிலத்தை தெளித்தாற் போல்
திரண்ட எம் தமிழர் குலாம் அன்று
திக்கு அறியாது மாய்ந்தனரே
உருண்டோடும் காலம் எல்லாம்
உள்ளமதில் இனி இர்ரணமே !!

வேல் கொண்டு பகைவர் சிரம் சாய்க்க
வெற்றி திருவேள் வருவானா? இல்லை அவர்
தாழ் பணியும் நிலையினை
தானிங்கு எமக்கு தருவானா
மேலான சிங்களவர் என்று இன்று
மேதினியோரும் கூறிடுவார் எனில்
தோள் கொடுத்து எம்மினத்தின்
தோதான புகழ் காக்க இனி யார் உள்ளார் ?

பேச்சினில் போர் தொடுத்து நாம்
பெற்றது தான் என்ன ? அறிவு
வீச்சினில் நாம் சிறந்தும் அவரிடம்
வீழ்ந்தது தான் ஏனோ? கோல்
ஓச்சும் தமிழ் ஈழத்தில் என்ற
கொங்கு தமிழ் முழக்கம் எல்லாம்
பாய்ச்சிய அவர் கணைகளுக்கு
பணிந்தது தான் ஏனோ ?


ஆழியும் கூட அழிக்க முடியா
அளப்பெரும் எம் தமிழ் தாய்
மூழி கொண்டு அன்று கயவர்
மூடிடுகையில் என் செய்தாள்?
வாழி தமிழ் மொழி என இன்றும்
வாயாற பாடுகிறான் - பெரும்
தாழியினுள் என்னை பகைவர்
இன்று தள்ளி விட்ட போதும் !!

கும்பகோணத்துப்பிள்ளை
28-07-2014, 06:41 PM
ஆன கதையின் ஆழ்காயம் ஆறாதெனினும்
ஆறுதல் தேடித்தோள் சேர்ந்தால் ஆவதென்ன?
பொங்கித்தீர்க்காமல் கருப்போல் வளர்த்தே
காலம்வந்ததும் தீர்க்கலாம் வஞ்சமே!

நாஞ்சில் த.க.ஜெய்
29-07-2014, 08:09 AM
அழகுற கோர்த்த வார்த்தைகளின் லயம் ..

Sabeekshana
29-07-2014, 02:10 PM
மிக்க நன்றி தோழரே!

பிரசன்னா
30-05-2015, 12:48 PM
உள்ள உணர்ச்சியில் திளைக்கிறேன்
தமிழ் வாழ்க

பிரசன்னா
30-05-2015, 12:50 PM
உள்ள உணர்ச்சியில் திளைக்கிறேன்
தமிழ் வாழ்க