PDA

View Full Version : சூரியனில் ஒளியில்லை..!!!!!



manivannan samikkannu
22-07-2014, 06:17 PM
சூரியனில் ஒளியில்லை என்று ....
இறைவன் இவள் கண்ணை படைத்தானோ ...!!!!!

கண்கொண்டு காணமுடியாத சூரியனை மறைக்க .....
சந்திரனாய் இவள் இமை படைத்தானோ ....!!!!

வானில் தோன்றும் வானவில்லை எடுத்து .....
இவள் இமை புருவங்கள் படைத்தானோ ....!!!!

உலகில் உள்ள மலர்களை திரட்டி .....
மலரினும் மிருதுவான இவள் இதழ் படைத்தானோ....!!!!!

ஊதும் புல்லாங்குழலில் இரு துவாரங்கள் எடுத்து ....
இவள் மூக்கை படைத்தானோ ....!!!

மலராத மலர்களின் தேனை எடுத்து ....
இவள் செவ்வாயை படைத்தானோ ....!!!!

தாமரை இலையின் அழகினை ஒன்றுசேர்த்து ....
இவள் நெற்றியினை படைத்தானோ ....!!!!

இவளின் ஒருபாதி அழகை வர்ணிக்கவே ....
வார்த்தை தேடுகிறேன் ....!!!!!

வாசுகியை அவளையும் வள்ளுவனாய் எனையும் ...
படைத்த கடவுள் அவளை வர்ணிக்க வார்த்தைகளை ....
படைக்க மறந்தான் இவளின் பேரழகை கண்டு ....!!!!!

படைத்த கடவுள் வார்த்தைகளை மறந்தான் ....
இவளை பார்த்தனான் எனை மறந்தேன் ....
இவளை மட்டுமே நினைக்க...!!!!

கம்பன் படைத்த கவியின் இலக்கணம் இவள்தானோ ...!!!!

கும்பகோணத்துப்பிள்ளை
28-07-2014, 04:56 PM
ல ல லƒல்லா ல ல லல்ƒல
ல ல ல லƒல்ல ல ல ல

M.Jagadeesan
29-07-2014, 03:20 AM
கும்ப கோணத்துப் பிள்ளையே ! உம்முடைய
...கூற்றின் பொருளறிய முடியாது தவிக்கின்றேன் !
உம்பர் உலகத்தின் ஊர்வசியின் அழகெல்லாம்
...உருக்கொண்ட காதலியை மணிவண்ணன் வர்ணித்தார் .
கம்பன் காட்டிய கவியின் இலக்கணமாய்
...காதலி இருக்கையிலே பிள்ளையே ! நீர்இங்கு
சும்மா லலல்லா என்று வர்ணித்தால்
...சுடுமன்றோ கவியாக்கிய மணிவண்ணன் மனது !

நாஞ்சில் த.க.ஜெய்
29-07-2014, 07:03 AM
இனிய பாடல்களுடன் கூடிய இசையோ இந்த கவிதை...

கும்பகோணத்துப்பிள்ளை
29-07-2014, 10:55 AM
ஜெகதீசன் ஜயாவிற்க்கு எனது பணிவான வணக்கங்கள்!
ஒரு பெண்னைப்பார்த்து நிலவைப்பார்த்தேன் நிலவில் குளிரில்லை!
அவள் கண்ணைப்பார்து மலரைப்பார்த்தேன் மலரில் ஒளியில்லை!
என்று கவியரசர் பாடினார்!
மணிவன்னன் சாமிக்கண்னுக்கோ அந்த பெண்னைப்பார்ததும் சூரியனில் ஒளியில்லை என்று பட்டிருந்து பாடியிருப்பதைக்கண்டதும்
ஒரு முணுமுணுப்பு (HAMMING) தோண்றியது!

அதான் அந்த "லல்லா"

ஒரு இணிமையான தாக்கத்தையோ நினைவுகளையோ கிளறினால் அது நல்ல கவிஞனின் வெற்றிதானே!

அந்த பாராட்டுத்தான் அந்த முணுமனுப்பு

Sabeekshana
29-07-2014, 03:19 PM
ஆகா என்ன ஒரு அருமையான விளக்கம் கும்பகோணத்து பிள்ளை அவர்களே!! :icon_b:

manivannan samikkannu
31-07-2014, 09:32 AM
ungal anaivarin parattukku nandri........