PDA

View Full Version : உன்னைப் போலவே...



கீதம்
21-07-2014, 11:36 PM
http://2.bp.blogspot.com/-WphSURnTb9g/U7ST7g36ePI/AAAAAAAACLE/mLqDZBFmBIQ/s1600/fall-floral-girl-design-vector-graphic-03.jpg


ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை
ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!

பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
ப்பூவென்று புறந்தள்ளி புழுதியிற் புரட்டுவதற்கு!

உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
உயிர்க்குடத்தில் கருவானது!

உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
உடுத்தவும் உரிமையுடையது.

உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
சிந்திக்கவும் கூடியது.

உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
அணைக்கவும் தலைப்பட்டது.

உன்னைப் போலவே உணரவும் புணரவும்
மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!

சாமான்யமாய் எண்ணிவிடாதே…
சாபத்துக்கு ஆளாகிவிடும்
சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!

கும்பகோணத்துப்பிள்ளை
28-07-2014, 05:15 PM
"உன்னையே படைக்கவல்லதையும்" சேர்திருக்கலாம் கீதம் அவர்களே!

பென்மையை போற்றுதும்! பென்மையை போற்றுதும்! என்ற மெய்யுணர்வழிந்தோர்க்கும்

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று ..... எனும் பொய்யாமொழிப்புலவரின் வரிகள் மறந்தோர்க்கும் உங்கள் எச்சரிக்கை போய்ச்சேரட்டும்!

M.Jagadeesan
29-07-2014, 02:54 AM
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இவ்வுலகில்
...ஏற்றமிகு மானிடப் பிறவிக்கு இணையுண்டோ ?
அத்தகு மானிடப் பிறவியிலே பெண்பிறவி
...அற்புதப் பிறவியென ஆன்றோர் உரைத்தனரே !
எத்தனை துன்பங்கள் ! எத்தனை தியாகங்கள் !
...எல்லாமே தாங்குகிற குடும்பத்தின் தூணாகும் !
அத்தனே ! நான்வணங்கும் ஆண்டவனே ! என்னுடைய
...அடுத்துவரும் பிறவிகளில் பெண்பிறவி வேண்டுவனே !

நாஞ்சில் த.க.ஜெய்
29-07-2014, 07:31 AM
உரிமை கேட்கும் பெண்ணின் மன வலியினை வார்த்தைகளில் தெறிக்கும் வெப்பத்தில் உணர முடிகிறது...



சாமான்யமாய் எண்ணிவிடாதே…
சாபத்துக்கு ஆளாகிவிடும்
சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!


இந்த இறுதி வரிகளை



என்னுள் அடங்கிய நீ!
சாமான்யமாய் எண்ணிவிடாதே…
சாபத்திற்கு ஆளாகிவிடக்கூடும்!


என்றிருந்தால் நன்றாய் இருக்கும் என்று எண்ணுகிறேன் ..




நன்றாய் இருக்கிறது ..தொடரட்டும் ...

கீதம்
30-07-2014, 11:26 PM
"உன்னையே படைக்கவல்லதையும்" சேர்திருக்கலாம் கீதம் அவர்களே!

பென்மையை போற்றுதும்! பென்மையை போற்றுதும்! என்ற மெய்யுணர்வழிந்தோர்க்கும்

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று ..... எனும் பொய்யாமொழிப்புலவரின் வரிகள் மறந்தோர்க்கும் உங்கள் எச்சரிக்கை போய்ச்சேரட்டும்!

உன்னையே படைக்கவல்ல என்னும்போது பெண்ணை உயர்த்தப் பார்க்கிறோம். அது தேவையில்லை என்பதே என் வாதம்.

உயர்த்தவும் வேண்டாம், தாழ்த்தவும் வேண்டாம். சகமனிதராய் நினைத்தாலே போதும் என்கிறேன் நான்.

ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி கும்பகோணத்துப்பிள்ளை.

கீதம்
30-07-2014, 11:29 PM
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இவ்வுலகில்
...ஏற்றமிகு மானிடப் பிறவிக்கு இணையுண்டோ ?
அத்தகு மானிடப் பிறவியிலே பெண்பிறவி
...அற்புதப் பிறவியென ஆன்றோர் உரைத்தனரே !
எத்தனை துன்பங்கள் ! எத்தனை தியாகங்கள் !
...எல்லாமே தாங்குகிற குடும்பத்தின் தூணாகும் !
அத்தனே ! நான்வணங்கும் ஆண்டவனே ! என்னுடைய
...அடுத்துவரும் பிறவிகளில் பெண்பிறவி வேண்டுவனே !

பெண்ணுக்கு மதிப்பு தரும் சமூகத்தில் பெண்ணாய்ப் பிறப்பது வரமே. பெண்ணுக்கு எதிரான கொடுமைகளைப் பார்க்கும்போதுதான் மனம் பதறுகிறது.

ஆண்டவனிடம் தாங்கள் வைக்கும் கோரிக்கை அகமகிழச் செய்கிறது. கவிப்பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டும் ஐயா.

கீதம்
30-07-2014, 11:34 PM
உரிமை கேட்கும் பெண்ணின் மன வலியினை வார்த்தைகளில் தெறிக்கும் வெப்பத்தில் உணர முடிகிறது...




சாமான்யமாய் எண்ணிவிடாதே…
சாபத்துக்கு ஆளாகிவிடும்
சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!

இந்த இறுதி வரிகளை




என்னுள் அடங்கிய நீ!
சாமான்யமாய் எண்ணிவிடாதே…
சாபத்திற்கு ஆளாகிவிடக்கூடும்!

என்றிருந்தால் நன்றாய் இருக்கும் என்று எண்ணுகிறேன் ..

நன்றாய் இருக்கிறது ..தொடரட்டும் ...

ஜெய், கும்பகோணத்துப்பிள்ளைக்கு சொன்ன அதே பதிலைத்தான் இங்கும் தர விரும்புகிறேன்.

என்னுள் அடங்கிய என்னும்போது பெண் தன்னை உயர்த்தி ஆணைத் தாழ்த்துகிறாள். அது தேவையில்லை.

எண்ணங்களும் உணர்வுகளும் இருவருக்கும் பொதுவானது என்று ஏற்றுக்கொண்டாலே போதுமானது.

கருத்துக்கு நன்றி ஜெய்.

கும்பகோணத்துப்பிள்ளை
01-08-2014, 08:45 AM
உன்னையே படைக்கவல்ல என்னும்போது பெண்ணை உயர்த்தப் பார்க்கிறோம். அது தேவையில்லை என்பதே என் வாதம்.

உயர்த்தவும் வேண்டாம், தாழ்த்தவும் வேண்டாம். சகமனிதராய் நினைத்தாலே போதும் என்கிறேன் நான்.
,ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி கும்பகோணத்துப்பிள்ளை.

ஆண் பெண்மையைப்போற்றியிருத்தலும பெண் ஆணைப்பெருமிதப்படுத்தலும் சாதாரணநிலையைக்காட்டிலும் உயர்நிலை!
இதில் யார் உணரவில்லையெனிலும் மற்றோர் அதை உணர்த்ததலைப்படுதல் இயல்பு மற்றும் நலம் பயப்பதாம்

என்னற்ற தமிழ்க்கவிஞர்களும், புலவர்களும், புரட்ச்சியாளர்களும் பெண்ணின் பெருமைகளை பாடியும் பேசியும் வந்தது ஆணினத்தை தாழ்த்தவன்று, தாழ்நிலைடபடுத்தப்பட்ட பெண்மையை உயர்த்தும் பொருட்டும், நிலைதாழா நிலையில் தக்கவைத்தலின் பொருட்டேயாம். இதுகாரும் சமுதாய நிலை முற்றிலும் மாறவில்லை, பேசாதிருத்தலினால் மிகப்பலர் பெண்ணின் பெருமையையும் அருமையையும் அறியாதிருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் சிறப்புரைத்து உணரவைப்பது ஆணைக்காட்டிலும் பெண்ணுக்கும் பெரும் பொறுப்பிருப்பதாக கருதுகிறேன்

பெண்ணாய்ப்பிறப்பதற்க்கே மாதவம் செய்திடல் வேண்டும் - என தேசிகவினாயகம்பிள்ளை வினே உயர்த்திப்பேசியதன்று உணர்ந்துப்பேசியது.

அதுகருதியே ஜெகதிசன் ஜயா

'அத்தனே ! நான்வணங்கும் ஆண்டவனே ! என்னுடைய
...அடுத்துவரும் பிறவிகளில் பெண்பிறவி வேண்டுவனே ! என தவம் செய்யப்போந்தார்போலும்.

தாய்மையே பெண்ணின் சிறப்புகளிலே தலையாணதும் மானுடத்தை இப்புவியில் தக்கவைத்து வாழவைப்பதுமாம்

எனவே 'படைக்கவல்ல' என்பதை ஆணுர உறைத்தல் உத்தமம் என கருதுகிறேன்

ravisekar
08-06-2015, 12:38 PM
பெண் மட்டுமா

விளிம்புநிலை ஊசலாட்டத்தில் ஏனையோரால் நசுக்க/ பயன்படுத்தப் படுவோரின் ஒட்டுமொத்தக் குரலாகவே ஒலிக்கிறது..


மானுடம் போற்றுதும்.. சகமானுடம் போற்றுதும். பின்னர் அதுதாண்டி பல்லுயிர் ஓம்புதும்!
பாராட்டுக்கள் கீதம் அவர்களுக்கு!

Keelai Naadaan
12-06-2015, 05:22 PM
உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
உயிர்க்குடத்தில் கருவானது!

உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
உடுத்தவும் உரிமையுடையது.

உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
சிந்திக்கவும் கூடியது.

உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
அணைக்கவும் தலைப்பட்டது.

உன்னைப் போலவே உணரவும் புணரவும்
மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!


எளிமையான வரிகளில் அழுத்தமாக மனதில் பதியும் வார்த்தைகள். பாராட்டுக்கள்.

ஜெயகாந்தனின் நாவலில் (பாட்டிமார்களும் பேத்திமார்களும்) வரும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது

ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்ன வித்தியாசம்?
ஆண்டவன் படைப்பில
சின்ன வித்தியாசம்.
அன்புக்கும் பகைமைக்கும்
என்ன வித்தியாசம்?
அனுபவிச்சு சொல்லுகிறேன்
சின்ன வித்தியாசம்.

Keelai Naadaan
12-06-2015, 05:24 PM
உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
உயிர்க்குடத்தில் கருவானது!

உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
உடுத்தவும் உரிமையுடையது.

உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
சிந்திக்கவும் கூடியது.

உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
அணைக்கவும் தலைப்பட்டது.

உன்னைப் போலவே உணரவும் புணரவும்
மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!


எளிமையான வரிகளில் அழுத்தமாக மனதில் பதியும் வார்த்தைகள். பாராட்டுக்கள்.

ஜெயகாந்தனின் நாவலில் (பாட்டிமார்களும் பேத்திமார்களும்) வரும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது

ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்ன வித்தியாசம்?
ஆண்டவன் படைப்பில
சின்ன வித்தியாசம்.
அன்புக்கும் பகைமைக்கும்
என்ன வித்தியாசம்?
அனுபவிச்சு சொல்லுகிறேன்
சின்ன வித்தியாசம்.