PDA

View Full Version : அசோகவனத்து ராமனாட்டம்!



கீதம்
21-07-2014, 11:27 PM
http://2.bp.blogspot.com/-A-oOZttzM9k/U8thBhdSrDI/AAAAAAAACM0/wX9wIJ5Lhh8/s1600/10468087_668568859884708_885521054611189110_n.jpg

ஆதிகாலக் கனவுகளின் வண்ணங்களைக்
குழைத்தென் அன்பின் வார்ப்பில்
பிரத்தியேகமாய் வார்க்கப்பட்டவன் நீ!

மேனி போர்த்த வண்ணங்களில்
பிரதிபலித்துக்கிடக்குமென் பிரேமைக்கும்
பேராரவாரப் பெரும்புயலென
உன்னுள் புகும் தருணமெதிர்பார்த்து
என்னிதழ்க்கடையில் குந்திக்கிடக்கும்
அமுதவீச்சுக்குமாய்
அந்தரங்கத் தனிமையில் காத்திருக்கிறாய்
அசோகவனத்து ராமனாட்டம்!

உன் உயிர்ப்பின் மந்திரத்தை ஒளித்துவைத்த
கவிதையின் முகவரியைத் தொலைத்தலையும்
இப்பிச்சிக்காய் இன்னும் சில காலம் காத்திரு…
வந்துவிடுவேன் என்றேனும் ஒருநாள்…
ஏதேனும் ஒரு சென்மத்தில்!

நாஞ்சில் த.க.ஜெய்
31-07-2014, 04:33 AM
உண்மை காதலில் காத்திருத்தலும் சுகம்தான் ..கவிதை நன்று ..

dellas
31-07-2014, 07:35 AM
காதலித்தால் சென்ம காலங்கள் கூட சில மணித்துளிகள் தானோ!!காத்திருப்பிற்கு?

கீதம்
06-08-2014, 01:16 AM
உண்மை காதலில் காத்திருத்தலும் சுகம்தான் ..கவிதை நன்று ..

நன்றி ஜெய்.


காதலித்தால் சென்ம காலங்கள் கூட சில மணித்துளிகள் தானோ!!காத்திருப்பிற்கு?

நன்றி டெல்லாஸ்.

கும்பகோணத்துப்பிள்ளை
07-08-2014, 09:05 PM
உன் உயிர்ப்பின் மந்திரத்தை ஒளித்துவைத்த
கவிதையின் முகவரியைத் தொலைத்தலையும்
இப்பிச்சிக்காய் இன்னும் சில காலம் காத்திரு…
வந்துவிடுவேன் என்றேனும் ஒருநாள்…
ஏதேனும் ஒரு சென்மத்தில்!

உண்மைதான்!
சென்மசென்மமாய் காத்திருந்தாலும்!
முகவரிகள் மட்டும் தொலைந்ததாகவே இருக்கின்றன!
சில அப்பாவி ஆண்களுக்கு!..


மிகவும் அழுத்தமான வார்த்தைகள்!.... பாராட்டுகள் கீதம் அவர்களே!

அனுராகவன்
16-08-2014, 04:25 PM
அழகான கவி கீதம் ...

ravisekar
14-08-2015, 12:48 PM
தலைப்பே அழகிய காட்சிக்கவிதை. அதை விஞ்சும் ஓவியம். அதையும் மிஞ்சும் கருத்துப்பா.

இளவரசி முத்தமிட்டால் தவளையும் இளவரசனாகும்போது, மயிற்தோகை ஒத்த வண்ணம் கொண்ட காதலுக்கும் அமிழ்தை ஒத்த இதழ்நீருக்கும் எத்தனை வலிமை இருக்கும்!!!!?????

ஆதிமந்தி அரற்ற ஆட்டனத்தி மீண்டு வந்ததுபோல்.. இந்த நாயகி ஏங்கலுக்கு நாயகன் நிச்சயம் உயிர் பெறுவான்.-- முகவரி கிடைக்குமுன்பே,,, இப்பிறவி தீருமுன்பே,,,

கீதத்துக்கு பாராட்டுக்கள்

Mano60
26-11-2016, 01:21 AM
கீதத்தின் நாதம் கண்டேன் இக்காலை வேளையில்
பேதமின்றி ஈருடல் ஓருயிராய் காதலிப்போர்
வேதமிது என்று நினைக்குமளவு அருமை வரிகள்
வேதனை தீர்க்க தூதன் அனுமனும் வரட்டும் விரைவினிலே

ravisekar
09-12-2016, 10:44 PM
மனோ60 - பா அருமை.

govindh
09-03-2018, 09:14 AM
அசோகவனத்து ராமனாட்டம்!
ஆம்...சோகக் கவி...!
இல்லை...இது சுகக் கவி...!
காத்திருப்பு -
சுகம் கலந்த சோகம்...!

கவி அருமை...!
பாராட்டுக்கள் .. கீதம் அவர்களே..!