PDA

View Full Version : காய்ச்சல் 102 °F



sukhan
16-07-2014, 04:36 PM
http://sr.photos2.fotosearch.com/bthumb/CSP/CSP945/k9457172.jpg
உரத்த குரல் உறங்கிப்போய்
மௌனமாய் நான்........
ஒற்றை சொல் பதில்
மெல்லிய புன்னகை
வேண்டும் தூக்கம்
வெறுக்கும் உணவு
குளிர் நிலவாய் சூரியன்
ஓய்வெடுக்கும் காற்றாடி
களைந்த அறை
முகம் பார்க்கும் கண்ணாடி
விழி பார்க்கும் கண்ணாடி
தொலைத்த இயல்பு
மாற்றங்கள் உன்னாலே
----- காய்ச்சல் 102 °F

கீதம்
18-07-2014, 12:06 AM
காய்ச்சல் வந்தாலும் கவிதைக்கு ஓய்ச்சல் ஏது? உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள் சுகன்.