PDA

View Full Version : எழுத்தென்பது வன்முறை..



rambal
23-01-2004, 02:30 PM
எழுத்தென்பது வன்முறை..

காயங்களில்
இருந்து வழிந்தோடுகிறது
என் குருதி..
சுவை பார்க்க
நீட்டிய நாவோடு
காத்திருக்கிறாய்
ஒரு வெறி கொண்ட
ம்ருகமாய்..

தனிமையின் கணங்களில்
மனப் படகில்
பயணம் போகும்
எனது எண்ணங்களை
திமிங்கலமாய்
விழுங்குகிறாய்..

ஒரு காட்டாறாய்
வெட்டும் மின்னலாய்
எப்போதும்
அவ்வப்போதும்
தவணை முறையில்
என்னைத் தாக்குகிறாய்..

நிச்சலணங்கள் அற்று
ஈர்ப்பு அற்று
பறக்க வைத்து
உயரே சென்றதும்
கீழே தள்ளுகிறாய்..
மிதிக்கிறாய்..

ஒரு போதையாய்
என் மூளையை ஆக்ரமித்து
எங்கோ தூக்கியெறிகிறாய்..

என் சுவாசத்தில்
கனவில், தனிமையில்
பயணத்தில், வெறுமையில்,
சந்தோச கணத்தில்,
ஏகாந்தத்தில் எங்கும்
குடிபுகுந்து
என் நிம்மதி
வேரறுக்கிறாய்..

நீ மாத்திரம்
இல்லையென்றால்
மரமெல்லாம் இல்லை..
ஒரு கிளையின் நுனி
கிடைத்தால் கூடப் போதும்..
சாசுவதமாய் அமர்ந்துவிடுவேன்..

karikaalan
23-01-2004, 05:40 PM
புரியறாப்ல இருக்குது; உடனே என்னா படிச்சோம்னு இன்னோர் முறை படிக்க வைக்குது.. ஹ¤ம்ம்..

பேனாவைப் பற்றியா; காகிதத்தைப் பற்றியா; ஓடோடி வரும் எண்ணங்களைப் பற்றியா? அல்லது இவையனைத்துக்கும் காரணமாக இருக்கும் காதலியைப் பற்றியா? காதலி என்றும் தோன்றவில்லை. கடைசி வரிகள் வேறாக இருக்கிறது.

இன்னொரு முறை படிப்போம்.

===கரிகாலன்

இளசு
23-01-2004, 10:50 PM
பிரசவ அவஸ்தையாய் சிலருக்கு
இயல்பான சுவாசமாய் சிலருக்கு
பிழைக்கும் உத்தியாய் சிலருக்கு
பொழுது போக்கியாய் சிலருக்கு
பகிரும் இதயமாய் சிலருக்கு...
கைதட்டல் பிச்சைத்தட்டாய் சிலருக்கு



இங்கே
வன்மை உறவாய் ராம்பாலுக்கு...


எழுத்துகளில் எத்தனை விதம்...
என் பாராட்டுகள் இளவலுக்கு..

பாரதி
24-01-2004, 12:29 AM
வித்தியாசம் ராம். பாராட்டுக்கள்.

rambal
24-01-2004, 08:10 PM
எந்தக் கிளையிலும் அமரமுடியாமல் சிறகடிக்கும் பறவை போல்
சுற்ற வைக்கிறது எழுத்து.. ஏதாவது ஒரு கிளையின் நுனி மாத்திரம் கிடைத்தால் போதும் எழுதுவதை நிறுத்தி விட்டு ஆனந்தமாய் அமர்ந்துவிடுவேன்..

விரிந்து கிடக்கும் வானைப் பார்க்கையில் கொட்டிக் கிடக்கின்றன சொற்கள்..
இதன் முடிவில் கிடைக்கும் வெறுமையின் விளைவே விளிம்பின் நுனியில் என்ற கவிதை.. அந்தக் கவிதைக்கு முன்பிருக்கும் நிலை பற்றி கவிதை இது..

karikaalan
25-01-2004, 08:25 AM
சொற்கள் அவ்வானில் அப்படியேதான் இருக்கின்றன. எடுத்து, கோர்த்து, கையாள்வதில்தான் தங்கள் திறமை வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள், ராம்பால்ஜி.

===கரிகாலன்

thamarai
25-01-2004, 08:45 AM
நீ மாத்திரம்
இல்லையென்றால்
மரமெல்லாம் இல்லை..
ஒரு கிளையின் நுனி
கிடைத்தால் கூடப் போதும்..
சாசுவதமாய் அமர்ந்துவிடுவேன்..

வேர் இல்லையென்றால் மரம் இல்லை... கிளை கிடைத்தால் சாசுவதமாய் அமர்ந்துவிடத் துடிக்கும்.... வரிகள் அருமை

நட்புடன்
தாமரை.