PDA

View Full Version : தெய்வ மகள்..



arun karthik
01-06-2014, 02:07 PM
மகள்!
தீமையொன்றுமறியாத தேவதைக் குவியல்களின்,
ஒருமித்த ஆன்மா....

மகள்!
அன்பென்ற ஆயுதத்தை அழகாகப்பிரயோகிக்கும்,
புனிதப் போராளி...

மகள்!
எதிர்பாலின வன்மதுன்மங்கள் காமக்கருமங்கள் கடந்த,
அன்பின் அங்கீகாரம்...

மகள்!
ஊருக்குச் சிம்மமாயினும் தந்தையிடம் மழலைமாறா,
முரண்பட்ட மங்கை...

மகள்!
எழுத்தறிவற்ற தந்தையும் படிக்காமல் உணரும்,
ஒரு உயிர்க் கவிதை....

மகள்!
தந்தை இறப்பினும் நினைவுகளால் உயிர்ப்பிக்கும்,
பிரம்மனின் பெண்பால்...

கீதம்
30-06-2014, 11:26 PM
தந்தையின் பார்வையில் மகளைப் போற்றும் அழகுக் கவிதை. பாராட்டுகள் அருண் கார்த்திக்.

சில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்தால் கவிதை இன்னும் சிறப்புறும்.
பிரயோகிக்கும், வன்மதுன்மங்கள், மழலை

வசீகரன்
04-07-2014, 07:05 AM
மகள்களை பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும்..
பாசம் என்பதன் உண்மையான அர்த்தம்!
சற்று அழுத்தமான வரிகள்...
மென்மையான கவிதைகளுக்கு அழுத்தமான வரிகள் தேவையில்ல...
அருமையான வடிவம்... பாராட்டுக்கள் நண்பர்!!

arun karthik
12-07-2014, 08:38 AM
எழுத்துப் பிழைகளை திருத்தியமைக்கு நன்றிகள் கீதம் அவர்களே.. வசீகரனின் கருத்துக்கும் நன்றி...