PDA

View Full Version : அப்பா அன்புள்ள அப்பா



vc43497
07-05-2014, 07:00 AM
சென்னையின் அந்த இரவு வேளையில் அப்பாவை நான் எதிர் பார்க்கவில்லை. அதுவும் அவர் இறந்து போன இருபது வருடங்கள் கழித்து.

முதலில் என்னை பற்றிய சிறு அறிமுகம். பெயர்....இந்த கதைக்கு எந்த வகையிலும் உபயோகம் இல்லாததால் விட்டு விடுகிறேன். நான் அவ்வளவுதான்..அந்த நான் நீங்களாகவும் இருக்கலாம்....என்ன குழ்ப்பமாக இருக்கிறதா...அவ்வளவு குழப்பம் என் வாழ்க்கையில்..

பிறந்தது தென் தமிழ் நாடு....தூத்துக்குடி அருகில் ஒரு கிராமம்...பெயர் மறந்து விட்டது....சென்னை வந்து முப்பது வருடம் ஆகிறது...அப்பா ஊரில் ஏதோ ஒரு பண்ணையில் வேலை செய்தார்...ஏர் ஓட்டினார்....சொல்லுங்க எசமான் என்று நின்றார்....திடீர் என்று ஒரு நாள் ஊருக்குள் கடல் புகுந்த அன்று எல்லாரும் கிராமத்தை விட்டு கிளம்பினோம். சென்னை வந்தோம். ரயிலில் எனக்கு டிக்கெட் எடுக்காமால், பென்சுக்கு அடியில் படுக்க வைத்தார்....உள்ளே போ....தலையை மறை என்றார்....
ரெண்டுக்கு நான்கு அடியில் ஒரு இரவு முழுவதும் வந்தேன். அந்த ஐந்து வயதுக்கு கொஞ்சம் அதிக வலிதான்..உள்ளே பென்ச் அடியில் மூட்டை முடிச்சுகளுடன், நிறைய செருப்புகள், அப்புறம் கால்கள்...ஆண்கள் கால்கள், பெண்கள் கால்கள்....., இன்னும் மறக்கவில்லை

சைதாப்பேட்டையில் ஒண்டி குடித்தனம். ஆறு வீடுகளுக்கு, ஒரு கழிப்பரை. மஞ்சள் விளக்கின் மெல்லிய ஒளியில் பத்தாவது முடித்தேன்.அப்பா வண்டி இழுத்தார். அதிகாலையில் போஸ்டர் ஓட்டினார். மாலை வேலைகளில், தி நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே மூல வைத்திய சாலை நோட்டீஸ் கொடுத்தார்.. அம்மா வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்தாள். அப்பா உடல் வலியோடு வரும் பொழுது, தயாராக, வெந்நீர் ஒத்தடம் கொடுப்பாள்.

அப்பா இரவு திரும்பும் பொழுது, காசை மிச்சாப்படுத்தி, ஏதோ ஒரு பழம் வாங்கி வருவார்.....

நல்ல படிக்கிறாயா கண்ணு....ஒன்னைய நம்பித்தான் நாங்க இருக்கோம்..நல்ல படிச்சி, பெரிய ஆளா வருவியாம்.....என்றார்.

எனக்கு சின்ன வயதில் இருந்து, ஏதோ சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. நன்றாக படித்தேன். எம் ஐ டி இல் எலெக்ட்ராநிக்ஸ் கிடைத்தது. கேம்பஸில் மூன்று எம் என் ஸி கள் என்னை எடுத்துகொள்ள தயார் ஆக இருந்தது. இரண்டு கம்பனிகள், யூ எஸ் செல்ல வேண்டும் என்றது. அம்மாவை விட்டு விட்டு, யூ எஸ் செல்ல மனம் இல்லாததால், வீட்டுக்கு அருகே இருந்த (ஈக்காடுதாங்கல்) மூன்றாவது கம்பெனியில் சேர்ந்தேன். கூட வேலை செய்யும் நிரஞ்சனாவாய் லவ்வினேன். அம்மா ஒத்து கொண்டாள். சைதாப்பேட்டை என் ஆர் என் மண்டபபத்தித்ில் திருமணம் நடந்தது. ஒரு வருடதத்ில் பிரியதர்ஷினி பிறந்தாள். இதெல்லாம் கதையின் போக்கை தீர்மானிக்க போவதில்லை. நான் சொல்ல நினைப்பது. மேற் சொன்னவைகளை எல்லாம் பார்ப்பத்ுார்க்க்கு முன்னால், (15/10/1990) இருபது வருடம் முன்பு, ஒரு அகால மத்தியான வேளையில், திருப்பதி ஸித்தூர் ஹை வேயீல், மாட்டு வண்டிக்காக ஸைட் கொடுக்கும் பொழுது, பாழாய் போன ப்ரேக் பிடிக்காததால், அப்பா லாரியில் அறைந்து, மாண்டு போனார். முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு, அடி வாங்கி இருந்தது. சட்டையும், லுங்கியும் அடையாளம் காட்டியது. போலீஸ் வந்தது. கம்பனி முதலாளி வந்து பத்ாய்யிரம் கொடுத்தித்ு விட்டு போனார். லாரீ கம்பணியில், அம்மாவுக்கு வேலை போட்டு தந்தார்கள். கொஞ்ச நாள் கழித்து, ஒரு நாள், அம்மா ஆஃபீஸ் விட்டு வரும் பொழுது, அழுது கொண்டு வந்தாள். என்னை கட்டி பிடித்து அழுது, நாமெல்லாம் உயிரோடு இருக்க கூடாது. என்றாள். பதின்ம வயதில் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. ஆனால், என்ன என்று கேட்பதர்க்கு பயமாக இருந்தது. அப்புறம், அம்மாவிர்க்கு எக்ஸ்*போர்ட் கம்பணியில், பீஸ் பார்க்கிற வேலை கிடைத்தது. பாருங்கள், எவ்வளவு சம்பவங்கள். எவ்வளவு ரத்தம். எவ்வளவு ஏமாற்றம். எவ்வளவு அழுகை.

ஸ்.....சொல்ல வந்த விஷயத்தை விட்டு விட்டு, வேறு எங்கோ போய்விட்டேன். இப்படி இருபது வருடம் முன்பு மாண்டு போன என் அப்பாவைத் தான், இப்போழுது என் கண் எதிரே, பார்க்கிறேன் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?

******************************************************************************************************************************************************************************************************************************************

முதலில் காலிங் பெல் ஸத்தம் கேட்டது. நான் தான் கதவை திறந்தேன். கண்களுக்கு பழக்க படாத அந்த மஞ்சள் வெளிச்சத்தில், அப்பா முழுமையாக தெரிந்தார். மேற்கொண்டு இது பேய் கதை என்று கிளம்பியவர்கள், போகட்டும். நீங்கள் இருங்கள். இது பேய் கதை கிடையாது. ஏன்எனில், அப்பாவிர்க்கு கால் இருந்தது. நன்றாக தரையில் பதிந்து இருந்தது. முதலில் அப்பா என்று கட்த்ி விட்டேன். அது ஆனந்தமா, அதிர்ச்சீயோ, அழுகையோ என்று என்னால் சொல்ல முடியவில்லை.

உள்ளே வரட்டுமா? என்று கேட்டு கொண்டு உள்ளே வந்தார்.
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை. கையில், மஞ்சள் பை. தலையில் மொட்டை. நெற்றி எங்கும் பண்டார விபூதி. விபூதி மறைத்தது போக, கொஞ்ச முகம்தான் தெரிந்தது.

அப்பா...நீங்க....எப்படி என்றேன்....

உள்ளிருந்து மனைவியும், குழந்தையும் எட்டிப் பார்த்தார்கள்.

இதுதான் உன் மனைவியா? என்றார்.
குரலில் பயங்கர கரகரப்பு.

நான் மனைவியிடம், அப்பா என்றேன். அவள் அதிர்ச்சியாக பார்த்தாள்.

"நான் இன்னும் சாகல.....உயிரோடு தான் இருக்கேன். அதை சொல்றதுக்குத்தான் வந்தேன். அன்னிக்கு இறந்தது, என் கூட வேலை பார்த்த, ஊமையன். அன்னிக்கு நான் லோட் ஏத்துவதற்காக, லாரியில் போனேன். போற வழியில், ஆந்திரா பார்டர், பக்கம் வரும் பொழுது, சாப்பாட்டிற்கு வண்டி நீக்கும் பொழுது, என்னை மறந்து விட்டு விட்டு போய்ட்டாங்க. திரும்பி வர காசில்லாத பொழுது, ஒரு ஆள் வந்தான். நான் உன்னைய, ஆந்திரா கூட்டிட்டு போறேன்னு சொன்னான். நான் அவன் கூட வண்டியில் போனேன். முதலில், சரியான ரோாடில்தான் போனான். பின்னாடி கிராமம் தாண்டி, எங்கே எங்கெயோ போனான். நான் கேட்டேன். இப்ப போகலாம் என்றான். ஒரு கிராமத்து கோவில் மாதிரி இருந்தது. பெரிய காளி. ஸூலாயுதம் பிரசாதாம்னு ஏதோ கொடுத்தான். மயங்கி விழுந்தேன். அப்புறம், நான் யார்னு எனக்கே மறந்த போச்சு. கண் திறந்து பார்க்கிறேன். ஏதோ ஒரு கோவில். ஆந்திராவில் அங்க ரொம்ப நாள் பிச்சை எடுத்தேன். நைட் ஒரு முறை சாப்பாடு போடுவான். காலையிலே கோவில் வாசல் போகணும். எனக்கு நான் யார், ஊர் என்ன எதுவும் ஞாபகம் இல்லை. டெய்லி, பிரசாதம் கொடுத்துடுவான். இப்ப கொஞ்ச நாள் முன்னாடி தான் கொஞ்ச கொஞ்சமா ஞாபகம் வந்தது. கோவிலுக்கு வந்த ஒரு தமிழ் ஆளு கிட்ட சொல்லி, தப்பிச்சு வந்தேன்.


இதை சொல்லும் பொழுது கண்களில் கண்ணீர். சிவகாமி எங்கே? என்றார்..என் முகத்தை படித்தவர் ஆக, போயிட்டளா என்றார். அவர் குரலில் ஏமாற்றம்.

அவரை என் ரூமில் படுக்க வைத்து, ஏசி போட்டு விட்டு வந்தேன். இரவு முழுவதும் உறக்கமில்லை. மனைவியிடம், நிறைய பழைய கதைகள் பேசினேன். காலையில், அவரை ஒரு நல்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்ல வேண்டும். விபூதி அழித்து, ஒரு நல்ல சட்டை, பேண்ட். வேண்டாம். வேட்டியே இருக்கட்டும்.

நான் தூங்கும் பொழுது அதிகாலை மூன்று மணி.


******************************************************************************************************************************************************************************************************************************************


காலையில் ஆட்டோவில் செல்லும் பொழுது சந்தோஷமாக இருந்தது. கூட மனைவியும், அப்பாவும். நான் சின்ன வயதில் இருந்து இழந்த, அனைத்தும், இப்போது கிடைத்த மாதிரி இருந்தது.
ஆஸ்பத்திரியில் ஸ்நேகமான புன்னகையில் ரிசப்ஷாணிிஸ்ட்.
போனில் உள்ளே இருந்த டாக்டரிடம் பேசி விட்டு, உள்ளே அனுமதித்தாள். கலியமூர்த்தி என்ற அந்த டாக்டர், இளமையாக இருந்தார். முன் வழுக்கை. இளந்தொப்பையில் பியர் தெரிந்தது.

பேஷண்ட் யாரு என்றார்....அப்பாவை காண்பித்தேன்.

என்னை ரகசிய மாய் உள் அறையில் கூப்பிட்டு, கொஞ்சம் ப்ளட் சாம்ப்பில் வேண்டும். ஈ ஸீ ஜீ பார்க்கணும். இப்படி படுங்க. என்றார்.

டாக்டர், நான் பேஷண்ட் இல்லை..அப்பாவிர்க்கு எடுங்க என்றேன்.
நான் அப்பாவை பார்த்தேன். தின மலரின் ராசி மலர் படித்து கொண்டு இருந்தார்.

தெரியும். உங்க ரிபோர்ட் மற்றும் அவர் ரிபோர்ட் கொஞ்சம் கம்பரிசோனுக்கு வேண்டும். படுங்க...என்றார்.

அவர் குரலில் இருந்த அதிகாரம் எனக்கு புதுசாக இருந்தது.

நான் அந்த வெள்ளை விரிப்பு கட்டிலில் படுத்தேன். இஞ்செக்ஷன் வலி இல்லாமல், மெல்லிய எறும்பு கடியாக இருந்தது.


பத்து லேர்ந்து, ஒண்ணு என்ணுங்க என்றார்.....

நான் என்ன ஆரம்பித்தேன்.

பத்து
ஒன்பது
எட்டு

தூரத்தில், என் மனைவி குரல் கேட்டது.

"இப்படித்தான் டாக்டர், ரெண்டு நாளா, உளராறு...வெற்றிடத்த் பார்த்து அப்பான்னு பேசாறாரு. குழந்தைங்களெல்லாம் பயப்பதிராங்க..."

எழு
ஆறு
அஞ்சு
நான்கு
அப்பா இப்பொழுது என்னை பார்த்து சிரித்தார். இதை எப்படி சொல்வேன்?
மருந்து உபயதத்ில், கொஞ்ச கொஞ்சமாய் மயக்கத்துக்கு சென்று கொண்டு இருந்தேன்.

உங்க கணவருக்கு பெரிய ப்ராப்லேம் இல்ல. அவருக்கு வந்த வியாதி பேரு னேக்ரொபோபிய. சின்ன வயசு நினவிிுகள் எல்லாருக்கும் இருக்கும். ஆனா அத தேவை பாடும் பொழுது மட்டும் தான் நினைக்கணும். மூளை கொஞ்சம் சிக்கலான விஷயம் பாருங்க. ஸர் கம்ப்யூட்டார்ல வேலை பார்க்கிறதா சொல்றீங்க. அங்கேயும் மூளைதான் அதிக அழுத்தத்துக்கு உண்டாகுது. கொஞ்ச நாள் எங்கயாவது ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டு வாங்க. பழைய தமிழ் படம் பார்க்க சொல்லுங்க. ஆறு மாசத்தில சரி ஆயிடும் என்றார்...

மனைவின் விசும்பல் கேட்டது.

நான் எண்ணி கொண்டு இருந்தேன்.

மூணு
ரெண்டு
ஒன்று

dellas
07-05-2014, 09:38 AM
vc 43497,

கதை நிறையவே சுற்றினாலும், நன்றாக இருக்கிறது.
பல கதைகளின் சாயல் இருந்தாலும், உங்களிடம் எதோ விஷயம் இருக்கிறது என்று நினைக்கிறன்.

வாழ்த்துக்கள்.

முரளி
07-05-2014, 10:50 AM
மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல நடை. அருமையான கற்பனை, கொஞ்சம் திகில். சுஜாதா சாயல் லேசாக தெரிகிறது.
நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்

நாஞ்சில் த.க.ஜெய்
31-07-2014, 04:19 AM
கதை நடை அருமை ...இன்றைய கணிப்பொறி ஊழியர்களின் மனச்சிதைவு நோய்களின் துவக்கம்..

vc43497
25-08-2014, 11:13 AM
நன்றி