PDA

View Full Version : என் ரகளை எந்திரம்



lenram80
27-04-2014, 11:03 PM
நண்பர்களே... இதோ 'ஆனந்த யாழை" பாடலின் எனது வடிவம்!


பொல்லாத சிரிப்பை வீசுகிறாய்!
அதில் சொல்லாத மொழியில் பேசுகிறாய்!

மழலை மந்திரமாய் கூவுகிறாய்!
என் ரகளை எந்திரமாய் மாறுகிறாய்!

கம்பன் இளங்கோ காவியம் கூட
உன் சொல்லுக்கு இணையாய் தோணவில்லை!

உன் கண்ணில் தெறிக்கும் துள்ளல் ஒளியில்
ஓடி ஓளியும் துன்பத் தொல்லை!

என் கைகள் பிடித்து நீ நடந்து வந்து
தந்த உறவு என்றும் வாழுமடி!

இந்த மண்ணில் மழலை உள்ளவரை
இந்த பூமி என்றும் ஒரு தாயின் மடி!

உனது காலடி தேடியடி
மேகத்தின் கூட்டத்தில் அடிதடி!
'மின்'னால் விழுகுது இடியடி!
உன்னால் பொழியுது மழையடி!

அயல் தேசம் எதற்கு? செல்வங்கள் எதற்கு?
உனது நேசம் போதுமடி!


இந்த மண்ணில் மழலை உள்ளவரை
இந்த பூமிக்கு உண்டு தொப்புள் கொடி!

உனது தேகம் அரும்படி!
பேசும் பேச்சு கரும்படி!
உன்னால் வாழ்வு வரமடி!
இப்படி(யே) நிலைக்க வரமளி!

மயிலும் எதற்கு? குயிலும் எதற்கு?
நீயே எனது பறவையடி!

இந்த மண்ணில் மகள்கள் உள்ளவரை
என்றும் படறுமிந்த நம் உறவடி!

lenram80
27-04-2014, 11:08 PM
இந்தக் கவிதையின் குரல் மற்றும் பாடல் வடிவம் யூ ட்யூபில்

http://youtu.be/P4E9fcmWxss

பாவூர் பாண்டி
29-04-2014, 05:18 PM
அழகு ... அழகு .. அப்படியே ரசித்தேன்...

lenram80
02-05-2014, 03:26 PM
நன்றி பாவூர் பாண்டி நண்பரே!