PDA

View Full Version : நெரிசல்



arun karthik
24-04-2014, 01:54 PM
சுற்றிலும்

வாகனங்களின்

பந்தோபஸ்துடன்,

ஒய்யாரமாக

நகருகிறது

அரசுப்பேருந்து...

-போக்குவரத்து நெரிசல்....

பாவூர் பாண்டி
24-04-2014, 07:22 PM
நல்ல சிந்தனை..
--------------------------
சிலேடை சத்தங்களில்
சில்லரைக் கார்களூடே
சிக்கல் மனதுடன்
சில மணித்துளி பயணம்..

மும்பை நாதன்
27-04-2014, 03:30 PM
உள்ளே மனித நெரிசல் ..
வெளியே போக்குவரத்து நெரிசல் ..
நெரிசல்களினூடேதானே வாழ்க்கை பயணம்..!

பாவூர் பாண்டி
29-04-2014, 05:21 PM
புகையும் நெரிசலில்
உரசும் முட்கள்
வெட்டி விட இல்லை
வெட்டரிவாள் கைகள்