PDA

View Full Version : யாருக்கு அனுகூலம் ?



மும்பை நாதன்
08-04-2014, 05:02 PM
தேர்தலில் தோற்றால்
மாணவனுக்கு
ஒரு வருடம்தான் வீண்.
வேட்பாளருக்கோ
ஐந்து வருடம் வீண்.

கும்பகோணத்துப்பிள்ளை
14-04-2014, 06:13 PM
தேர்தலில் மாணவன் ஈடுபட்டால் வேட்பாளர் தோற்றாலும் வெண்றாலும் மாணவனுக்கு அவ்வருடம் வீண்தானே

மும்பை நாதன்
15-04-2014, 03:52 PM
தேர்தலில் தோற்றால்
மாணவனுக்கு
ஒரு வருடம்தான் வீண்.
வேட்பாளருக்கோ
ஐந்து வருடம் வீண்.
ஆனால் மாணவனுக்கு புரியுமோ ?
படிப்பில் இழப்பது ஒரு வருடம்
வாழ்வில் இழப்பது எத்தனை வருடங்கள் ?

மும்பை நாதன்
15-04-2014, 04:02 PM
தேர்தலில் மாணவன் ஈடுபட்டால் வேட்பாளர் தோற்றாலும் வெண்றாலும் மாணவனுக்கு அவ்வருடம் வீண்தானே

வேட்பாளர் வெற்றி பெற மற்றவர்களின் உழைப்பு கிடைக்கும்
மாணவன் வெற்றி பெற தானேதான் உழைக்க வேண்டும்.
பின்னூட்டத்திற்கு நன்றி கு.கோ.பி !

M.Jagadeesan
17-04-2014, 04:13 PM
தோற்றாலும் வென்றாலும் மாணவனால் மற்றவர்க்கு
......துன்பங்கள் ஏதுமில்லை; துயரங்கள் வருவதில்லை!
காற்றோடு செல்லுகின்ற காகிதக் குப்பைபோல்
......கட்சிவிட்டு கட்சிமாறும் அரசியல் வாதியெல்லாம்
கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே
......கும்பிட்டு விழுந்திடுவார்; உயிரினைக் காத்திடுவார்!
வெற்றியினைத் தந்திட்ட மக்கட்கு அவராலே
......வேதனை ஐந்தாண்டு! வேறென்ன கூறிடுவீர்!

மும்பை நாதன்
20-04-2014, 07:55 AM
"கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே
......கும்பிட்டு விழுந்திடுவார்..."

அழுத்தமான கருத்துப்பதிவு.

பின்னூட்டத்திற்கு நன்றி, ஜகதீசன் அவர்களே.

lenram80
02-05-2014, 03:55 PM
நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள்!
எவன் வென்றாலும், கடந்த 60 வருடங்களாய் தோற்பது வேட்பாளர்களை கழித்தது போக மீதி உள்ள நம் மக்கள் மட்டுமே!