PDA

View Full Version : எனக்கொரு எதிரி



vivek viswakarma
23-03-2014, 06:59 PM
எனக்கொரு எதிரி கிடைத்தான்
உண்மையில் நான் விரும்பாமலே
என் தோள் மேல் கையிட்டு
உடன் வரத்தொடங்கினான்

தூற்றினேன்
தொலைந்து போ என்றேன்

அவன் சிரித்துகொண்டான்
நான் சினம் கொண்டேன்

கேள்விகள் கேட்டேன்
பதில்களை பக்குவமாய் சொன்னான்

என் வெற்றிகளை இழுத்தடிக்கிறாய் என்றேன்
உன் ம்யற்சிகளின் எண்ணிகையை கூட்டுகிறேன் என்றான்

எனக்கு வலி ஏற்படுத்துவதே உன் நோக்கம் என்றேன்
உனக்கு வழிகளை காட்டுவதே என் நோக்கம் என்றான்

நீ என் படிக்கட்டுகளை உடைக்கிறாய் என்றேன்
நான் உனக்கு சிறகு முளைக்க உதவுகிறேன் என்றான்

நீ மக்களிடம் என்னை அவமானப்படுத்துகிறாய் என்றேன்
நான் மக்களை உனக்கு அடையாளம் காட்டுகிறேன் என்றான்

அவனை புரிந்து கொள்ள தொடங்கினேன்
தோழன் போல ஆகிவிட்டான்

என் தோழனின் பெயர் தோல்வி -----விவேக் இராஜகோபால்

ஸ்ரீசரண்
30-03-2014, 05:20 PM
முன்னேற்றத்துக்கு உதவும் நல்ல எதிரி.............

நாஞ்சில் த.க.ஜெய்
25-08-2014, 01:33 PM
தன்னம்பிக்கை கூறும் வரிகள் ..தொடரட்டும் .....