PDA

View Full Version : தலைப்பில்லாத கவிதைகள் - 8



lavanya
22-01-2004, 09:47 AM
தலைப்பில்லாத கவிதைகள் - 8

செல்லமாய் கோபித்து
பேசாமலே எழுந்து போனாய்...
இந்த சந்திப்பில்....
...........
இரண்டு வரி கவிதை
தினம் உன் வழக்கம்
போய் வருகிறேன் என்றாவது
சொல்லிவிட்டு போடா....

இக்பால்
22-01-2004, 10:23 AM
போய்
வருகிறேன்

என்பதை இருவரி கவிதையாக எடுத்துக் கொள்ள திட்டமா தங்கை?

aren
22-01-2004, 10:37 AM
காதலன் போய் வருகிறேன் என்று சொல்வதும் கவிதையா? காதலன் எது சொன்னாலும் கவிதைதான் போலும்.

இளசு
22-01-2004, 11:42 PM
சொல்லாத கவிதைக்கு
விலை அதிகமே..

பாராட்டுகள் லாவ்..

இன்னும் தொடரட்டும் தலைப்பைத் தேடும் மன விதைகள்..

kavitha
23-01-2004, 06:30 AM
இரண்டு வரி கவிதை
தினம் உன் வழக்கம்
போய் வருகிறேன் என்றாவது
சொல்லிவிட்டு போடா....


2 வரிக்கவிதையும் போச்சு, டாடா வும் போச்சா!
கோபப்பட்டால் என்ன
லாபம்?

அடுத்தமுறை வட்டியோடு வாங்கி விடுங்கள்!