PDA

View Full Version : தலைப்பில்லாத கவிதைகள் -7



lavanya
22-01-2004, 09:45 AM
தலைப்பில்லாத கவிதைகள் -7


மாடிப்படி வளைவில்
நித்தம் நித்தம் நடக்கும்
நொடி நேர சில்மிஷங்களில்
நீண்டு விடுகின்றன
தினம் இரவுகள்...
நாளையும் வருவாய்தானே....

இக்பால்
22-01-2004, 10:19 AM
தங்கச்சி...தூள் கிளப்புறீங்க... பாராட்டுக்கள். :)

aren
22-01-2004, 10:34 AM
வாவ்!! சில்மிஷங்களாக இருந்தாலும் பின்னர் அதை நினைத்து நினைத்துப் பார்க்கும் பொழுது ஒரு கிக் தானாகவே கிடைக்கிறது.

இளசு
22-01-2004, 11:40 PM
சில சுகங்கள் வாமனன் மாதிரி..
சின்னதாய் .. பின் அதுவே பெரிதாய்..
மனசின் மாயாவதாரம் அவை..

பாராட்டுகள் லாவ்..தொடருங்கள்