PDA

View Full Version : சிவன் லீலை...!!



அனுராகவன்
03-03-2014, 03:34 AM
ஆதியிலே பிறந்ததால்
சக்திக்கு பாதியே கொடுத்ததால்
சுடுக்காட்டு சாம்பல் அணிந்தவன்..
யானையின் தோலை போர்த்தவன்..

புலியின் தோலின் மீது அமர்பவன்..
இடையிலும்,கழுத்திலும்
பாம்பை கொண்டவன்...
அவன் தான் என் ஈசன்..

கால காலமாய்..தேடினாலும்
சிக்காத ,மேலும் கீழும் அடையாத
யாரும் விரும்பாத வகையில் ..

யாரும் ஒதுக்கும் பொருட்கள்
கொண்ட என் அப்பன்..
அவன் தான் சிவன்..

தில்லையில் அவன் ஆடிய ஆட்டம்..
மதுரையில் கால் மாற்றி ஆடிய ஆட்டம்..
ஆகா !! கண் போதாது...


ஈசா...மண்ணில் யாவரும் அடையும்
ஞானம் அவனிடமே..
அஃதே என் வாழ்வு உன்
வசமே!!

சிவ ராத்திரி..இது உடுக்கையின் இடி..
நெருப்பின் வெளிச்சம்..
சுடுக்காட்டில் பிணம் எரியும்..
அஃது....என் விரும்பும் இடம்..

கும்பகோணத்துப்பிள்ளை
07-03-2014, 03:58 PM
குறுங்கவிதைகளில் பக்தி....
இது ஒரு நல்ல ஆரம்பம்
வாழ்த்துகள் அச்சலா!


ஆனா ஒன்னு!!

சக்திக்குப்பாதியை கொடுத்ததால் சாம்பலைப்பூசியவன்!....
இங்கதான் கொஞ்சம் பூசலை கிளப்பிவிடலாம்னு நினைக்கிறேன்!

அனுராகவன்
15-03-2014, 04:06 PM
நன்றி நண்பா..