PDA

View Full Version : மூன்று கவிதைகள்



Vinoth Kumar
26-02-2014, 01:50 PM
எனக்கு தெரியாத காலத்தில்

மாறுகின்ற பாரியினில் மாற மறுக்கிற மனமே !
மண்ணும் மறந்து போனது மாண்டவர்களின் நல்ல மனதை,
நிற்கின்ற இடத்திலே நில்லாமல் ஓடும் காலமே !
கலகம் தான் உன்தன் காற்றினில் கலந்ததோ?
அது பரவி நல்ல மனதை தீய மனதோடு வான் வழி சென்றதோ?

சில காலம்

காதல் என் மீது தான் முதலில் வைத்தேன் ,
அது ஆலமரமானது
விழுதுகளில் விளையாடி ஓய்ந்தார்கள்
கிளி போல் நீ வந்ததும் தான் மறுமலர்ச்சி காதல் உன் மீது விழுந்தது

பல காலம்

இதில் நகை சேர்க்க முடியுமா ?எனக்கு தெரியாது
தனம் இல்லாத கைஒரு சிறுவன்
குபேர வீதியினில் பணியாளன் ஆனான்
அவர் கணக்காக பணக்காரனென பெயர் சூட்டப்பட்டான்
குப்பையை பெருக்கி ஓய்வில்லாத வேலையை செய்து கொண்டான்
அந்நிய சந்நியாசி ஒருவன் அவ்வீதியின் வழியே வந்தான் குறும்புக்கார குழைந்தையிடம் கேள்வியை தொடுத்தான்
இங்கே நல்ல பணக்காரன் எங்கே?
நல்ல ,நல்ல பணக்காரன்-- எனக்கு தெரியாது..