PDA

View Full Version : வலி



inban
13-02-2014, 02:48 PM
சிற்பி
நிராகரித்துப்போன
கல்லாய்
குறைவின் வலியில்
குமைந்துகொண்டிருக்கிறேன்

பேசாமல் நீ
புன்னகைக்காமலே இருந்திருக்கலாம்

என்றாவது சிற்பமாவேன் எனும்
வசீகரக் கனவோடேனும்
வாழ்ந்து முடித்திருப்பேன்