PDA

View Full Version : வாசித்ததில் யோசித்தது ...



NaanMadhu
13-02-2014, 12:45 PM
நாம் படிக்கும் கதை கட்டுரை கவிதைகளில் ஓரிரு வரிகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி நம் சிந்தனையை த்தூண்டி விடுகிறது அப்படி நாம் படித்து ரசித்தவைகளை இங்கு பதிவிடலாமே ...

NaanMadhu
13-02-2014, 12:46 PM
சயின்ஸ் படித்ததினால் கடவுளைப்பற்றிய குழப்பங்கள் தீரர்க முடியாமல் இருக்கின்றன யேட்ஸ் சொன்னது போல " சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள் பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள் உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது ... - மறைந்த எழுத்தாளர் சுஜாதா

NaanMadhu
13-02-2014, 12:50 PM
விலங்குகளின் அரசனான சிங்கத்துக்கு அரண்மனை இல்லை ஏன்?
எந்த மிருகமாவது தனக்கு தேவையை விட பெரிய வாழிடம் கேட்கிறதா?
தன் குட்டிகளுக்கு இரண்டு குகைகள் வாங்கிப்போடுகிறதா ?

NaanMadhu
17-02-2014, 08:27 AM
ஆணுக்குத் திருமணத்துக்கு முன், பின் இரு வெவ்வேறு குணங்கள். போலவே பெண் குணத்தையும் அவள் மகனின் திருமணத்துக்கு முன், பின் எனப் பிரிக்கலாம் (@dlakshravi)

மகன் திருமணத்திற்கு பின் பேயாய் மாறிவிட்ட ஒவ்வொரு பெண்ணும் திருமணமான புதிதில் தன் மருமகளை மகள் போல பாவிக்க வேண்டும் என நினைத்திருந்தவர் என்பது தான் வேடிக்கை

nellai tamilan
25-03-2014, 02:51 PM
விலங்குகளின் அரசனான சிங்கத்துக்கு அரண்மனை இல்லை ஏன்?
எந்த மிருகமாவது தனக்கு தேவையை விட பெரிய வாழிடம் கேட்கிறதா?
தன் குட்டிகளுக்கு இரண்டு குகைகள் வாங்கிப்போடுகிறதா ?

ஏன் சார் மனிதனை மிருகத்தோடு ஒப்பிடுகிறீர்கள்.
மனிதன் மகத்தும்மிக்கவன்.
ஐந்தறிவு படைத்தவையோடு
ஆண்டார்ய்டு பயன்படுத்தும் மனிதனை ஏன் ஒப்பிடு வேண்டும்.

மும்பை நாதன்
25-03-2014, 04:27 PM
சுவையாக இருக்கிறது.
நான் வாசித்ததில் யோசிக்க வைத்தது:

"வாழ்வில் ஒரு கணமேனும் என்னை நினப்பவர்களின் முழு வாழ்க்கைக்கும் நான் பொறுப்பேற்கிறேன். --அன்னை "

nellai tamilan
26-03-2014, 06:58 AM
சுவையாக இருக்கிறது.
நான் வாசித்ததில் யோசிக்க வைத்தது:

"வாழ்வில் ஒரு கணமேனும் என்னை நினப்பவர்களின் முழு வாழ்க்கைக்கும் நான் பொறுப்பேற்கிறேன். --அன்னை "

சரியாக யோசித்தால் அருமையான விசயம் சின்ன வரிகளுக்குள்.
எனக்கும் பிடித்திருக்கிறது அன்பரே...