PDA

View Full Version : உற்றதோழி உன்மனையாள் ஒருத்தியே! (ஆக்கம் : அருட்கவி)



Arudkavi Ganesh
10-02-2014, 06:12 PM
உற்றதோழி உன்மனையாள் ஒருத்தியே!
(நிலைமண்டில ஆசிரியப்பா)


கற்றவர் யாவரும் கவிதையிற் பாடுவர்
பெற்றவள் அன்பே பெரிதென வாழ்வில்!
பற்றிய கணவன் பாதை மாறியே
தொற்று நோயொடு தொழுநோய்; காணினும்
கற்பக தருதரும் கள்ளொடு மதுவகை
மற்றவை தொட்டு மடியினும் உனக்குப்
பற்றுடன் பேணிப் பணிவிடை செய்வது
உற்ற தோழி உன்மனை யாளே!

M.Jagadeesan
11-02-2014, 10:31 AM
" கற்பக தருதரும் கள்ளொடு மதுவகை " இந்த வரிக்கு விளக்கம் தரவும்.

M.Jagadeesan
11-02-2014, 10:52 AM
வாழ்க்கைத் துணையென பெண்ணை அன்றே
...வள்ளுவன் மொழிந்தது உண்மை அன்றோ?
வீழ்த்திடும் ஆயிரம் பகைவர் வரினும்
...வெற்றி உமக்கே துணைவி இருந்தால்
ஏழ்வகைப் பிறவி எதுவாய் இருப்பினும்
...ஏந்திழை உன்னைத் தொடர்ந்தே வந்து
மூழ்கிடச் செய்வாள் அன்பு மழையில்
...முதலிடம் தந்தே அவளைக் காப்பாய்!

Arudkavi Ganesh
11-02-2014, 12:46 PM
கற்பகதரு என பனைமரத்தினை அழைப்பர். பனையிலிருந்து எடுக்கப்படும் கள்ளு முதலாய மதுபானங்களை அருந்தி மடியினும் என்பது பொருள்-

அருட்கவி