PDA

View Full Version : பெண் தெய்வம் (ஆக்கம் : அருட்கவி)



Arudkavi Ganesh
10-02-2014, 06:10 PM
பெண் தெய்வம்
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

பெண்ணைப் பேயென்று பேசிடும் பித்தரே
உன்னை யீன்ற உன்தாயும் பெண்ணே!
கண்ணின் இமையடா காத்திடும் தெய்வங்கள்
உண்மையாய்ப் பழகிப்பார் உயிரையும் ஈவாள்
மண்ணிலே மடிந்து மாய்ந்ததன் பின்னரும்
உன்னையே யெண்ணி உருகுவாள் பெண்ணே!
பண்டும் இன்றும் பண்புகளைக் காப்பது
பெண்கள் தானென்று உலகம் ஏற்குமே?