PDA

View Full Version : நண்பா!! கோபமா??



அனுராகவன்
08-02-2014, 04:29 AM
எத்தனை வருடங்கள் போனாலும்
எதிர் எதிர் துருவங்கள் போனாலும்
எங்கோயே கேட்ட குரல்
அது என் நண்பனின் பேச்சுக் குரல்..

தொடர்ந்து வர முடியல
தொண்டைக்கு கூச்சம்
தொண்டர்கள் யாரும் இல்ல
தொடர்ந்து வர முயல்வேன் மன்றத்தில்......

வேலை ஏராளம்;அதை சொல்ல முடியல..
இண்டர் வசதி இல்ல,கணினியும் கிடைக்கல..
காசுக்கு பிரமோசன்,காதில் கேட்கும் என்
பாடல் அன்னையின் தாலாட்டுதான் மிச்சம்..

நண்பர்கள் கேட்டனர்;மனதில் மறக்கல..
நேரமின்மையே காரணம்..அது
அன்புக்கு .பாசத்திற்கு விலையா? என்று....
கோபம் கொள்ள வேண்டாம்..
மன்னிக்க வேண்டும் நேரம் கிடைத்தால்..
வருவேன் பின்னோட்டம் இட..


தமிழ்மன்றமே என் தாய் வீடு..
அதில் உறங்க ஆசை..
ஆனால் வேலை பளு காரணம்..
நேரமின்மை இன்னொன்று..
யாரையும் குறைக்கூறல..
என் அலச்சியுமும்,சோம்பிறித்தனமும் காரணம்..
மறக்க வேண்டாம் என்னை..
நானும் உங்கள் நண்பனே!!!!

ஜான்
10-02-2014, 01:28 AM
பொதுவாக எழுதப்பட்ட கவிதையா,அச்சலா?

M.Jagadeesan
10-02-2014, 02:34 AM
நண்பனின் கோபம் நல்லதுதான் அச்சலா!
...நட்பின் இலக்கணமே இடித்துரைக்கும் பண்பன்றோ!
கண்போன்ற உறவினர்கள் கைவிட்டுப் போனாலும்
...கடைசிவரை நம்முடனே இருப்பவன் நண்பன்தான்
புண்பட்ட நெஞ்சிற்கு புத்துணர்வு தந்திடுவான்
...புயலொத்த துன்பங்கள் வந்தாலும் காத்திடுவான்
மண்ணுலகில் ஆயிரம் தெய்வங்கள் தோன்றிடினும்
...மனமென்னும் கோயிலிலே நண்பனுக்கே முதலிடமாம்!

அனுராகவன்
10-02-2014, 05:48 PM
பொதுவாக எழுதப்பட்ட கவிதையா,அச்சலா?
இல்லை நான் பல நாள் தொடர்ந்து வர முடியல அதான் கவியில் சொல்ல முயன்றேன்..

அனுராகவன்
10-02-2014, 05:48 PM
நண்பனின் கோபம் நல்லதுதான் அச்சலா!
...நட்பின் இலக்கணமே இடித்துரைக்கும் பண்பன்றோ!
கண்போன்ற உறவினர்கள் கைவிட்டுப் போனாலும்
...கடைசிவரை நம்முடனே இருப்பவன் நண்பன்தான்
புண்பட்ட நெஞ்சிற்கு புத்துணர்வு தந்திடுவான்
...புயலொத்த துன்பங்கள் வந்தாலும் காத்திடுவான்
மண்ணுலகில் ஆயிரம் தெய்வங்கள் தோன்றிடினும்
...மனமென்னும் கோயிலிலே நண்பனுக்கே முதலிடமாம்!நன்றி ...மிக்க நன்றி..