PDA

View Full Version : தந்தையர்புகழ் பாடிடுவோம் (பாவினம்)



Arudkavi Ganesh
06-02-2014, 04:04 PM
தந்தையர்புகழ் பாடிடுவோம்
(ஆக்கம்: அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்)


(பாவினம்)
பல்லவி
தந்தையர்புகழ் பாடிடுவோம் தெய்வங்களாய்ப் போற்றிடுவோம்
முந்தைவினைப் பயனமைந்த முத்துக்களே தந்தையர்கள்

அனுபல்லவி

இயந்திரமாய் உழைத்துவரும் இன்னுயிரைப் பாடிடுவோம்
இம்மையிலே நாம்காணும் இறையன்றோ தந்தையர்கள்

சரணம்
உயர்ந்து குடும்பம் வாழவேண்டி ஓடி உழைப்பார்- தினம்
தெரிந்துநல்ல தீன்பண்டம் தேடிக் குவிப்பார்
இல்லறத்தில் இனிதுறத்தான் நாங்கள் வாழவே- என்றும்
இராப்பகலாய் உழைத்திடுவார் சோம்பல் இன்றியே

கத்திக்கத்திப் பிள்ளைகளைக் கற்றிட வைப்பார்- அவையில்
முந்தி யிருத்தும் முனைப்பினிலே கண்ணாயிருப்பார்
துன்பமெல்லாம் அவரிதயம் தூக்கிச் சுமந்துமே- நாளும்
இன்பமொன்றே எமக்களிக்கும் இறைவன் தந்தையே

தன்னைத்தீர்த்து ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்திபோல்- வாழ்வில்
முன்னேகாணும் முதற்தெய்வம் தந்தையர் அன்றோ?
கண்ணிமைபோல் என்னைக் காக்கும் எந்தன் தந்தையே- நீங்கள்
மண்ணும் விண்ணும் மகிழ்ந்துபோற்ற நீடுவாழ்கவே!

கும்பகோணத்துப்பிள்ளை
07-02-2014, 08:52 AM
அவனியில் அன்னையும் பிதாவும் போலொரு தெய்வம் உண்டாவெனில் இல்லையாம்
தனக்கொரு மகனோ மகளோ உருவானபின் தந்தையானவர் தனக்காக வாழ்வதில்லை
தம் மக்கள் நலனே தந்நலமென வாழ்வர்
இவ்விடையம் செவியும் கருத்தும் அறிந்தே இருந்தாலும் அவர் உயிருடன் இரும்காலையில் மனதில் உறைப்பதில்லை என் போன்ற மடையருக்கு
இழந்தபின்னே தான் புரிகிறது! தெரிகிறது அருமை!

தந்தைக்கு வாழ்த்துக்கவி எழுதிய அருட்கவியே நீவீர் வாழி பெரும் மக்கட் செல்வத்துடன்!

அனுராகவன்
08-02-2014, 04:11 AM
வந்தனம் நண்பா...