PDA

View Full Version : நன்றி நன்ப!



கும்பகோணத்துப்பிள்ளை
05-02-2014, 12:01 AM
என் மௌனத்தின் உள்ளே
என் வார்தைகளைப் புரிந்து கொண்டாயே!
நன்றி நன்ப!

என் கோபத்தின் பின்னே
என் அன்பைப் புரிந்து கொண்டாயே!
நன்றி நன்ப!

என் மகிழ்வின் ஊடே
என் உழைப்பை புரிந்து கொண்டாயே!
நன்றி நன்ப!

என் பகிர்வின் பின்னே
என் சோகத்தைப் புரிந்து கொண்டாயே!
நன்றி நன்ப!

என் தொடுதலில் ஊர்ந்த
என் ஆறுதலைப் புரிந்து கொண்டாயே!
நன்றி நன்ப!

என் பார்வையில் படந்த
என் பரிதவிப்பை புரிந்து கொண்டாயே!
நன்றி நன்ப!