PDA

View Full Version : வெண்ணிலா



M.Jagadeesan
30-01-2014, 04:31 AM
வானவீதி நீந்தியோடும் வெண்ணிலாவே!- நீதான்
...வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே?
கானவெளியில் ஜோதிவீசும் வெண்ணிலாவே!- உந்தன்
...காதலுக்குக் காத்திருப்பேன் வெண்ணிலாவே!
கூனலான உன்பிறையை வெண்ணிலாவே!-அந்தக்
...கூத்தன்ஏனோ சூடிவைத்தான் வெண்ணிலாவே!
மானமுள்ள மனுஷிஎன்றால் வெண்ணிலாவே!-சிவனை
...மறந்துஎன்னை ஏற்றுக்கொள்வாய் வெண்ணிலாவே!

காயமென்ன உன்முகத்தில் வெண்ணிலாவே!- அந்தக்
...காரணத்தைச் சொல்லிவைப்பாய் வெண்ணிலாவே!
தூயதான உன்ஒளிக்கு வெண்ணிலாவே- அந்தத்
...தும்பைப்பூவும் ஈடுஆமோ வெண்ணிலாவே?
மாயமாக மாதமொருநாள் வெண்ணிலாவே!- நீதான்
...மறைந்துஎங்கே செல்கிறாயோ வெண்ணிலாவே!
தேயுமுன்னைக் கண்டபின்னும் வெண்ணிலாவே!-மாந்தர்
...தேன்நிலவென் றேனுரைத்தார் வெண்ணிலவே?

பாரிமகளிர் உன்னைக்கண்டு வெண்ணிலவே!- பாடும்
...பாட்டிலுள்ளம் பரிதவிக்கும் வெண்ணிலாவே!
மாரிக்காலம் வந்துவிட்டால் வெண்ணிலாவே!-உந்தன்
...முகத்தைநீயும் மூடுகின்றாய் வெண்ணிலாவே!
யாருமுன்னைப் பார்க்குமுன்னே வெண்ணிலாவே!- நீயும்
...என்னருகில் வந்திடுவாய் வெண்ணிலாவே!
வாரியுன்னை அனைத்துநானும் வெண்ணிலாவே!- இன்பம்
...வழங்கியுன்னை வாழ்த்திடுவேன் வெண்ணிலாவே!

கும்பகோணத்துப்பிள்ளை
31-01-2014, 12:34 AM
மழலைகள் கண்டே உண்ட நிலா!
காதலர்கள் கண்டே குளித்த நிலா!
கவிஞர்கள் கண்டே களித்த நிலா!
மனிதர்கள் கண்டே தொட்ட நிலா!

ஆனால் இங்கோ!.. ஜெகதீசனய்யா மோகித்த வெண்ணிலா!
சந்தமுள்ள நிலவுப்பாட்டு! பாராட்டுகள்

M.Jagadeesan
31-01-2014, 01:18 AM
கு.பிள்ளை அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

ரமணி
31-01-2014, 01:09 PM
வெண்ணிலாக் கவிதை அருமை. அந்த ’மாதமொருநாள்’ எண்ணும் சொல்லில் மட்டும் ஓசை தவறுகிறது.
’மாயமாக மாதமொருநாள்’ என்பதற்கு பதிலாக, ’மாயமாய்மா தம்மொருநாள்’ என்றிருக்கலாமோ?

--ரமணி

*****

ஸ்ரீசரண்
02-02-2014, 01:55 PM
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ

இளையவளோ மூத்தவளோ வெண்ணிலாவே...


என்ற பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றது.....


அருமையான கவிதை... அல்ல.. அல்ல.... அருமையான பாடல்.

ஜான்
02-02-2014, 11:50 PM
முதல் இரு வரிகள் திரைப்பாடல்தானே?

M.Jagadeesan
03-02-2014, 04:37 AM
ரமணி அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

தாங்கள் கூறியது உண்மைதான். அந்த இடத்தில் ஓசைநயம் நெருடலாக உள்ளது.

M.Jagadeesan
03-02-2014, 04:39 AM
ஸ்ரீசரண் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

M.Jagadeesan
03-02-2014, 04:44 AM
ஜான் அவர்களே! தங்கள் ஊகம் உண்மைதான். முதல் இருவரிகள் திரைப்பட பாடல் வரிகள்தான்.

jasminet
30-03-2014, 01:37 PM
நன்றாக இருந்தது ஜெகதீசன்...