PDA

View Full Version : ரயில் சினேகம்-1



மதுரை மைந்தன்
25-01-2014, 09:04 PM
" தடம் எண் 12635 சென்னை எக்மோரிலிருந்து செங்கல்பட்டு விழுப்புரம் திருச்சிராப்பள்ளி வழியாக மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் சற்று நேரத்தில் புறப்படும்". ஒலிபெருக்கியில் வந்த அறிவிப்புடன் சேர்ந்து ஜனங்களின் இரைச்சல்கள், குழந்தைகளின் அழு குரல் இத்யாதிகளுடன் எக்மோர் நிலையம் அமளிப்பட்டது. தன்னுடைய ரிசர்வேஷன் பெட்டிகளை தேடிக்கொண்டு பயணிகள் விரைந்து கொண்டிருந்தனர். ஒரு அன்ரிசர்வ்ட் பெட்டியின் வாயிலில் மிலிட்டரி யூனிபார்முடன் கண்ணில் கறுப்பு கண்ணாடி அணிந்த இளைஞன் நின்று கொண்டிருந்தான். பெட்டியின் வெளியில் சில இடங்களில் " இந்த பெட்டி ராணுவ வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டது" என்று எழுதிய தாள் ஒட்டப்பட்டிருந்தாலும் அதை நின்று படிக்க முடியாதவர்கள் 'மிலிட்டரி" என்று பெரிதாக சாக் பீஸில் எழுதியிருந்ததை பார்த்து விலகி சென்றார்கள். அந்த இளைஞனை சற்று தூரத்திலிருந்து பார்த்த சில விடலைகளில் ஒருவன் " அங்கே பார்டா சூர்யா நிக்கறாரு" என்றான். இன்னொருவன் " இல்லைடா அது நம்ம தலை டா" என்றான். அவன் அப்படி சொன்னதும் இன்னொருவன் (அவன் தீவிர அஜீத் ரசிகனாக இருக்கணும்) " எங்க தலை இவரை விட நல்ல சிவப்பா இருப்பாரு" என்றான். " ஆமாம் ஆனா தலை கூட நரைச்சிருக்கும்" என்று கூறி கேலியாக சிரித்த ஒருவனை அஜீத்தின் தீவிர ரசிகன் அடிக்க போய்விட்டான். அவர்களில் மூத்தவனாக இருந்தவன் " இருங்கடா ஏன்டா சண்டை போட்டுக்கிறீங்க. நாம் அவர்கிட்ட போய் கேட்டிடுவோம்" என்று கூற அவர்கள் அந்த இளைஞனிடம் பவ்யமாக சென்றார்கள்.

" சார் நீங்க சூர்யா தானே, இல்ல சார் நீங்க அஜீத் தானே" என்று கேட்டு வந்த விடலைகளை பார்த்து சிரித்தான் அந்த இளைஞன். " நான் சூர்யாவும் இல்லை அஜீத்தும் இல்லை. போங்க போய் படிச்சு உருப்பட பாருங்க" என்றான் அவன். அதைக்கேட்டு ஏமாற்றத்துடன் விடலைகள் அங்கிருந்து நகர்ந்தனர். அவன் நின்றிருந்த பெட்டியின் உள்ளே அவனுடைய சக ராணுவ தோழர்கள் கூச்சலும் ஆரவாரமுமாக இருந்தார்கள். அவனுக்கு அவர்களுடன் இணைவதில் விருப்பமில்லை. பிளாட்பாரத்தில் வரும் போகும் பயணிகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் அவன்.

க்ரீன் சிக்னல் மாறி கார்ட் விசில் கொடுத்தவுடன் ரயில் நரத்தொடங்கியது. அப்போது அவசரம் அவசரமாக கையில் சூட்கேஸ் ஒன்றை சுமந்துகொண்டு ஒரு பெண் அவனருகில் வந்தாள். அவள் வண்டியில் ஏறுவதற்கு வாக்காக தன் கைகளை நீடினான் அந்த இளைஞன். ரயில் வேகமெடுக்க அதனுடன் ஒட்டி ஓடி வந்த வள் அவன் கைகளை பற்றலாமா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்துவிட்டு பற்ற அவன் அவளை லாவகமாக வண்டிக்குள் ஏற்றினான். பெட்டி முழுவதும் இருந்த ராணுவ வீரர்களைக் கண்டு சற்று மிரண்டு போனாள் அந்த பெண்.

" பயப்படாதீங்க. நானிருக்கிறேன். அடுத்த ஸ்டேஷன்ல வண்டி நிக்கும்போது உங்களோட ரிசர்வ்ட் சீட்ல உக்காத்தி வைக்கிறேன்" என்று கனிவாக அவளிடம் கூறினான்.

" எங்கிட்ட ரிசர்வேஷன் இல்லை. அவசர*த்தில் சாதா டிக்கெட் மட்டும் வாங்கினேன்" என்று சொன்ன அவள் தன் உள்ளங்கையில் மடித்து வைக்கப்பட்டு வேர்வையில் நனைந்திருந்த பேப்பரை காட்டினாள் அவள்.

" எந்த ஊருக்கு போறீங்க"

" மதுரை வரைக்கும்"

" இப்படி நின்னுகிட்டே ப்போக வேண்டாம் வாங்க சவுகரியமா உக்காருங்க" என்று அவனுடைய தோழர்களிடம் சென்று அவன் பேச அவர்கள் அவனுக்கு சல்யூட் செய்து இரு பெஞ்சுகளை காலிசெய்து வேறு பெஞ்சுகளுக்கு சென்றார்கள். அவளுடைய சூட்கேஸை வாங்கி சாமான்கள் வைக்கும் இடத்தில் வைத்து தன் கர்சீப்பால் ஜன்னலருகே இருந்த பெஞ்சை துடைத்து அவளை அமரச்செய்து விட்டு தான் எதிர் பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.

அவன்: நீங்க ஸ்டூடன்டா?

அவள் சிரித்துக்கொண்டே இல்லையென்று தலையாட்டினாள்.

அவன்: அப்போ வேலை பண்றீங்களா?

அவள்: கொஞ்ச நாள் நர்ஸா இருந்தேன். டீச்சரா கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். கடைசியா ஒரு கம்பெனில முதலாளிக்கு செகரட்டரியா வேலை பார்த்தேன். இப்ப ஒண்ணும் பண்ணலை.

அவன்: உங்க பெயரை தெரிஞ்சுக்கலாமா?

அவளுக்கு அவன் தன் மீது காட்டும் அக்கறை பிடித்திருந்தது. மெதுவாக தானும் அவன் பால் ஈர்க்கப்படுவதை அவள் உணர்ந்தாள்.

அவள்: என் பேரு மேரி. முழுப்பெயர் ஸ்டெல்லா மேரி. உங்க பேரு?

அவன்; ரத்னம்.

அவன் ஒரு கிரிஸ்டியன் என்றி நினைத்த அவளுக்கு அவன் பெயர் சற்று ஏமாற்ரத்தை தந்தது.

அவள்; நீங்க கிரிஸ்டியன்னு நினைச்சேன்.

அவன் சிரித்துக்கொண்டு: நான் கிரிஸ்டியன் தான். என் முழுப்பெயர் டேவிட் ரத்னம்.

இவர்களுக்குள் ஒரு நெருக்கம் உருவ்வதற்கு ஏற்றாற்போல் அவனுடைய சக ராணுவ தோழர்கள் பாட ஆரம்பித்தார்கள்.[/color]

[color=#FF0000]"ஒன்ஸ எ பாப்பா மெட் எ மாமா இன் எ லிட்டில் டூரிஸ்ட் பஸ்

என்னடி பாப்பா சொன்னது டூப்பா கன்னம் சிவந்தது வாடிஸ் திஸ்

மை டியர் பாப்பா தலையில் டோபா வாட் எபவுட் தெ ஹேர் ஆயில்

ஈவினிங் ப்யூட்டி என்னடி டூட்டி மீட் மி இன் த போட் மெயில்

லா...லா..லால்லா..லா.லா..லால்லா"

மேரியும் டேவிட்டும் அந்த பாடலை ரசித்து சிரித்தார்கள்.

தொடரும்

dellas
28-01-2014, 10:53 AM
கதையின் நாயகர்கள் எல்லாம் திரைப்பட நடிகர்கள் போல்தான் இருக்க வேண்டுமா ?! அழகற்றவர்களைச் சுற்றி உலகம் நகர்வதில்லையா ?

கோபம் கொள்ள வேண்டாம். என்மனதில் நிறைய நாட்களாகவே உள்ள குறைபாடு இது.

ஜான்
29-01-2014, 12:12 AM
தொடருங்கள் ஐயா