PDA

View Full Version : இறப்பின் மகிழ்வு !!



பாவூர் பாண்டி
20-01-2014, 01:43 AM
உடல் கொண்ட உயிர்
அற்றுப் போனது
சுடு காட்டில்!!

சாகா வரம்
வேண்டுபவர்
இழப்பது வாழ்வின்
மகிழ்வைத் தான் !!

M.Jagadeesan
20-01-2014, 03:31 AM
இறப்பைக் கண்டு அஞ்சாதே மனமே!
...இதுவே எனது வேண்டுதல் தினமே!
இறப்பும் உறக்கமும் ஒன்றுபோல் ஆகும்.
...இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்.
இறப்பை வெல்ல நினைப்பவன் பேதை!
...இறப்பே துன்பம் கடக்கும் பாதை!
இறந்தும் வாழ்ந்திட வழியொன்று உண்டு
..".அறஞ்செய விரும்பு " என்றார் பண்டு.