PDA

View Full Version : நீங்கள் மூளையில் வலப்பக்கமா, இடப்பக்கமா பயன்படுத்துகிறீர்கள்? : ஐந்து நிமிடங்களுக்குள் சொல்க



அமீனுதீன்
11-01-2014, 07:02 PM
https://lh4.googleusercontent.com/uTY3RHVGLAS117vNQZi89vkQg4roSL_OD8-WQqSXAcIG=w500-h307-no
பொதுவாக மனிதர்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமுள்ள மூளையை பயன்படுத்தி யோசிப்பார்களாம். இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.
சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் இந்த இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் உங்களுக்கு சட்டென புரிந்து கொள்ள முடியும்)
பரீட்சையின் இறுதியில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்டுபிடிக்கலாம் என்று தான் இந்த இணையத்தளம் சொல்லும். ஆனால் அதற்காக ஆர்வக் கோளாறில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பட்டு பட்டுனு பட்டன்களை தட்டிச் சென்றீர்கள் என்றால் இறுதி முடிவு சிலவேளை தவறாக கொடுக்கலாம். ஆக கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக மனம் என்ன சொல்கிறதோ, மன்னிக்க, மூளை என்ன சொல்கிறதோ அது படி பதில் அளியுங்கள். நிச்சயம் நீங்கள் எந்தப்பக்க மூளையை பயன்படுத்துபவர் என ஆதாரத்தோடு அடித்துச்செல்கிறது இப்பரீட்சை.

இணைப்பு : http://en.sommer-sommer.com/braintest/

jasminet
30-03-2014, 05:49 PM
நன்றி அமினுதீன்...இரு பகுதி மூளைகளும் சமமாகப் பாவிக்கப் படுகின்றன எனக் கண்டுபிடித்தேன்.

ஜான்
31-03-2014, 02:20 AM
அடடா!!எனக்கு வந்த ரிசல்ட்டை வெளியே சொல்ல முடியாதே!!

மும்பை நாதன்
31-03-2014, 04:34 PM
நன்றி அமினுதீன்.
இடது பக்கம் 59% என்றும் வலது பக்கம் 41% என்றும் கண்டுகொண்டேன்.

dellas
22-04-2014, 12:42 PM
இரு பக்கமும் சமம்.

vasanthy2k7
22-04-2014, 04:21 PM
எனக்கு...
56/44

vasanthy2k7
22-04-2014, 04:21 PM
எனக்கு...
56/44