PDA

View Full Version : ஒளி பிறந்தது



vasikaran.g
07-01-2014, 05:43 AM
பூமிப் பந்தில்
பெத்தலஹெம் என்ற சந்தில்
ஒரு ஆட்டுமந்தை !
அதில் பிறந்தது
ஒரு புதிய சிந்தை !
முந்தை பழமைகளை
கந்தை நினைவுகளை
உந்தித்தள்ளி துள்ளி எழுந்தது
ஒரு நல்லப் பிள்ளை !

தைரிய பெண் மரியன்னைக்கும்
உலகம் அறிய அரிய தந்தை
வறிய யோசெப்புவுக்கும்
அன்று பிறந்தது ! நன்றாய்
ஒரு கன்று பிறந்தது -உலகம்
சிறக்க ! உண்மை நிலைக்க !

அன்று ! இதே நாளில்
வளி பிளந்தது ! வழி தெரிந்தது !
ஒளி பிறந்தது ! வலி குறைந்தது !
களி மகிந்தது !நனி எனும் கனி விளைந்தது !

மேய்ப்பரின் தோன்றலால்
ஏய்ப்பவர்களின் வலிமை
இனி குறையலாம் !
ஏழ்மைநோய்களில் வாழும் சேய்களின்,
எதிர்பார்ப்பு கனவு இது !

இது மனம் இசைந்த நேரம் !
இனி வசந்த காலம் என்று
இனிய கீதம் இசைத்து மகிழ்ந்தனர் !
எங்கும் ஒலிக்கும் புதிய நாதம்
புரட்சி ஓதும்! இனி சாத்தான்கள் பாவம் !


தேவதேவனே ! தூய நாதனே !
பாவம்,நாங்களே ! இறக்கும்
மனிதம் சிறக்க எங்கள் பாவங்களை
தாங்குங்களேன் ! எங்களுடன் தங்குங்களேன் !


வசிகரன்.க




நேரமின்மை காரணமாக இந்த கவிதையை உடனே வெளியிடமுடியவில்லை ..