PDA

View Full Version : உறவும் பிரிவும்



ஜான்
07-01-2014, 01:45 AM
பதினைந்து நாட்கள்
பழகிய நட்பினில்
பற்றிக்கொண்டது
காதலா
நட்பா
வெறுங்காமமா
என்றறியாமல்
திரும்பித்
திரும்பிப்
பார்த்துக்கொண்டே
கோவிலுக்கும்
சர்க்கசுக்கும்
லாரி ஏறிச் செல்கின்றன
முகாம் யானைகள்

தாமரை
07-01-2014, 06:20 AM
அடுத்த வருஷம் வரைக்கும் நினைவிருந்தால் காதல்தான்..

பாவூர் பாண்டி
07-01-2014, 09:21 AM
யானைகள் வண்டிகளில்
அடித்து இழுத்துச் செல்லப்படுகின்றன
ஒவ்வொரு முறையும்
இது காதல் ஆகுமா??