PDA

View Full Version : கவிஞன் விஞ்ஞானியானால்..!!!



சுதா
25-12-2013, 08:28 AM
http://cdn3.tamilnanbargal.com/sites/default/files/styles/large/public/images/42395/woman-scientist.jpg?itok=EB-VXmop

==பூமி==

இருபத்தி மூன்றரை
சாய்வு கோணத்தில்
பரதமாடும் பெண்...!!!

பரதத்தின் பாத சுவடுகள்
நீள்வட்ட கோலம்..!!!


==நிலா==

சுழல் ஆணியின்றி
அந்தரத்தில்
சுழலும் பம்பரம்..!!!

கதிரவனின் கதிரொளியை
குளிர்விக்கும்
கோல குளிர்விப்பான்..!!!

தினகரனை பூமிக்கு
எதிரொளிக்கும்
பாதரச கண்ணாடி ..!!!

==வானம்==

கணக்கில்லா உயிர்கோலங்களை
உள்ளடக்கிய
எல்லையில்லா அமேசான் காடு..!!!

பகலவன் ஒளிக் கீற்றில்
வேய்ந்த
நீலக் கற்பனைக் கூரை ...!!!

ராகத்தோடு பூமியின் தாகம்
தணிக்கும்
மேகக் குடங்களின் தோட்டம் ...!!!

==வானவில்==

திரவ தேகத்தை சிதைத்து
கார்மேகமது
சிந்துகிறது திரவ முத்தை..!!!

பரிதியவன் பார்வை
திரவ மேனியில் தெறித்து
ஏழு வண்ண வட்டமானது ..!!!

==கடல்==

பூமகள் உடலில்
படர்ந்துள்ள
உவர்ப்பு நீர்படலம்..!!!

அறிவியல் அறியாத
உயிர்களின்
அதிசய உலகம்..!!!

சரித்திரத்தை கரைத்து
கரையாத
சரித்திரமான கரைப்பான்..!!!


==அணுக்கரு பிளவு==

கவிஞனின் கற்பனைப் போல
துகளொன்று இரண்டாகிறது
இரண்டு நான்காகி எட்டாகி
.
.
.
தொடர்கிறது முடிவிலியாக

கட்டுபடுத்தினால்
அணு உலையெனும் கவிதை
கட்டுபடுத்தாவிட்டால்
வெடி குண்டெனும் அழிவு ..!!!!

---இது ஒரு கற்பனை---

--சுதா--

பாவூர் பாண்டி
26-12-2013, 03:15 AM
விண்ணில் விந்தைகள் பல
ஆயிரம் உள்ளனவே!

என் எண்ணங்களும்
நட்சத்திரங்கள் போல்
எண்ணிலடங் காயினவே

M.Jagadeesan
26-12-2013, 05:23 AM
விஞ்ஞானி கவிஞனானால் ...என்ற தலைப்பே பொருத்தமாயிருக்கும்.