PDA

View Full Version : 1947.. 2014.. அதே காலண்டர்..



maduraipandi
19-12-2013, 03:40 AM
67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டிருப்பதால், இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோசியக்காரர்கள் ஆளாளுக்கு ஆரூடம் கூறிக் கிளம்பியுள்ளனராம். புது வருடம் பிறக்கப் போகிறது என்றாலே கணிப்புகளும் கச்சை கட்டிக் கொண்டு கலகலப்பாக கிளம்பி விடுவது வழக்கம்தான். அந்த வகையில் 2014ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இப்போதே பலரும் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி நடக்கும், அப்படி நடக்கும், எப்படியும் ஏதாவது நடக்கும் என்ற ரேஞ்சுக்கு கணிப்புகளை எடுத்து மூளையில் திணிக்கும் வேலைகள் மும்முரமாகியுள்ளன.
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/s720x720/1497758_643653905686136_1631227079_n.png













<a href=http://www.getaheadofthegames.com/best-friv-games >http://getaheadofthegames.com/best-friv-games</a>























<a href=http://www.getaheadofthegames.com/best-cooking-games >getaheadofthegames.com/best-cooking-games</a>

கௌதமன்
19-12-2013, 12:15 PM
1947 - ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. 2014 காலண்டர் 1947 காலண்டரோட ஒத்துப் போகுதுன்னா என்ன விஷயமா இருக்கும்? 2014 ல் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் விடை சொல்லுமா?

தாமரை
20-12-2013, 05:19 AM
1913, 1919,1930. 1941,1947,1958,1969, 1975, 1986,1997, 2003 கடந்த நூறாண்டுகளில் ஒத்த தேதிகளையும் கிழமைகளையும் கொண்ட ஆண்டுகள் இவை.


எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

2003 இந்தியாவில் காலூன்றினேன்
1997 அமெரிக்காவிற்குச் சென்றேன்
1986 பொறியியல் கல்லூரியில் முத்தமிழ் மன்றச் செயலாளரானேன்
1975 என் தந்தை சுய தொழில் ஆரம்பித்தார்
1969 என் தந்தை பெங்க்களுரில் பவர் லூம் மெக்கானிக் ஆக சேர்ந்தார்.

ஆராய்ந்தா முழுசா ஆராயணும். இல்லைன்னா அது மூட நம்பிக்கைக்கை ஆகிடும்