PDA

View Full Version : மேதைகளின் நகைச்சுவை...



perumald
18-12-2013, 03:40 PM
கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்,''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''

perumald
04-01-2014, 03:36 AM
ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் .

அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , ” நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா ? ” என்று கேட்டார் . அதற்கு அந்த சிறுவர்கள் , ” ஊர் கோடியில் இருக்குது ! “
... என்று ஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள் .

உடனே , ” ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது ?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் . குழந்தைகள் பதில்
தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்

.அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே , ” இதோ இங்கே இருக்குது… “
என்று வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு .

perumald
04-01-2014, 03:39 AM
ஒருமுறை ஆபிரஹாம் லிங்கன் அவர்களை காண ஒருவர் சொல்லிக் கொள்ளாமல்
வந்திருந்தாராம், அந்த நேரம் பார்த்து அவர் வெளியே போயிருக்க, கொஞ்சம்
நேரம் காத்திருந்து கடுப்பாகி, வீட்டு வாசலில் கழுதை என்று எழுதி வைத்து
சென்றாராம்.

வந்தவர் யார் என்பதை எழுத்தை வைத்து அறிந்த ஆபிரஹாம்
லிங்கன், அடுத்த நாள் அவரை சந்தித்து நேற்று நீங்க எங்க வீட்டுக்கு
வந்தீங்க போலிருக்குது, உங்க பெயரை எழுதி வைச்சிட்டு போனீங்க, அதனால யார்
வந்தது என்பதை அறிய ரொம்ப வசதியா போச்சு என்றாராம்.

perumald
04-01-2014, 03:43 AM
ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்று இருந்தார்.. இதைக் கண்ட ஓட்டுநர் மிகுந்த அக்கறையுடன் கேட்டார்..

" அய்யா.. இன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாமே..?"

" அது இயலாது டாம்.. ஏகப்பட்ட பேர் காத்துக்கொண்டிருப்பார்கள்.. அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை..!"

இருந்தாலும் ஓட்டுநருக்கு மனசு தாளவில்லை.. ஒரு யோசனை சொன்னார்..

" அய்யா.. ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களே..? உங்கள் உரைகளை நிறைய கேட்டிருக்கிறேன்.. இன்று உங்களுக்கு பதிலாக, உங்களுடைய இடத்தில் நான் இருந்து உரையாற்றுகிறேனே..?'

ஐன்ஸ்டீனுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. ஓட்டுநரின் தொப்பியை அணிந்துகொண்டு ஐன்ஸ்டீன் கடைசி இருக்கையில் அமர்ந்துகொள்ள, ஒட்டுநர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரை ஆற்றினார்.. கூட்டத்துக்கு ஐன்ஸ்டீன் எப்படியிருப்பார் என்று தெரியாததால் ஓட்டுநர்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் என்று நம்பிற்று. இருந்தாலும் திடீரென்று ஒரு எதிர்பாராத சிக்கல் ஒரு பேராசிரியர் வடிவில் கிளம்பியது. அவர் ஒரு விடயத்தைப் பற்றிய சந்தேகத்தை நீண்ட கேள்வியாக கேட்டு விளக்கமளிக்க வேண்டினார்..திக்கு முக்காடிய ஓட்டுநர் சட்டென சுதாரித்து சொன்னார்..

" இது மிகவும் சிறிய பிரச்னை பேராசிரியரே.. இதற்கான விளக்கத்தை கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் என் ஓட்டுநரே கூட அளிக்க முடியும்..!"

மனதிற்குள் ஓட்டுநரின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்துகொண்டே ஐன்ஸ்டீன் எழுந்து சென்றார் விளக்கமளிக்க...!

perumald
04-01-2014, 03:56 AM
சர்ச்சில் பிரிட்டின் பிரதமரா இருந்த சமயம், தன்னோட நாடகத்துக்கு ரெண்டு டிக்கெட்டை ஒரு கவர்ல வெச்சு கூடவே ஒரு லெட்டரையும் வெச்சாரு. ‘‘இத்துடன் என் நாடகத்துக்கு இரண்டு டிக்கெட் அனுப்பியுள்ளேன். உங்கள் நம்பரையும் அழைத்து வரவும். பின்குறிப்பு: அப்படி ஒருவர் இருந்தால்’’ என்று எழுதி அனுப்பினார். சர்ச்சில் பார்த்தாரு.. அதே டிக்கெட்டுகளை வேற கவர்ல போட்டு கூடவே அவர் ஒரு லெட்டர் வெச்சாரு: ‘‘நீங்கள் அனுப்பியுள்ள தேதியில் பிஸியாக இருப்பதால் என்னால் நாடகத்துக்கு வர இயலாது. இரண்டாவது முறை நாடகம் நடக்கும்போது டிக்கெட் அனுப்பவும். பின்குறிப்பு: அப்படி இரண்டாம்முறை நடந்தால்’’ன்னு எழுதி அனுப்பினார். ஷாவுக்கு சரியான மூக்குடைப்பு! சர்ச்சில் பேச்சுலகூட வல்லவருங்க. பாராளுமன்றத்துல ஒருமுறை அவர் பேசிக்கிட்டிருந்தப்ப, அவர் பேச்சுக்கு ஈடுகொடுத்து வாதாட முடியாத எதிர்க்கட்சி பெண் எம்.பி. ஒருவர் கோபமாயி, ‘‘நீங்க மட்டும் என் கணவரா வாய்ச்சிருந்தா, காப்பியில விஷத்தைக் கலந்து கொடுத்திருப்பேன்’’ அப்படின்னாங்க. சர்ச்சில் ரொம்பக் கூலா... ‘‘உங்களை மாதிரி எனக்கு மனைவி வாய்ச்சிருந்தா, அதை சந்தோஷமா வாங்கிக் குடிச்சிருப்பேன்’’ன்னு சொன்னாரு பேச்சில் வல்ல அந்த மேல்நாட்டு அறிஞர்.

perumald
04-01-2014, 03:57 AM
அறிஞர் அண்ணா முதல்வரா இருந்தப்ப, பார்லிமென்ட்ல ஒரு எதிர்க்கட்சி நபர், ‘‘எங்க ஆட்சியிலதான் புளிய மரங்கள் நிறைய நட்டு. புளி விளைச்சல் அதிகமாகி புளியின் விலை குறைஞ்சது. இது யாருடைய சாதனை?’’ன்னு மேஜையில குத்திக் கேட்டாரு. அறிஞர் அண்ணா அலட்டிக்காம, ‘‘அது புளிய மரத்தின் சாதனை’’ என்று சொல்லி அவையை கலகலக்க வைத்தார்.

முரளி
06-01-2014, 05:41 AM
கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்,''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''

நன்றி பெருமாள்.

ஆஹா! என்ன நல்ல கருத்து? எவ்வளவு உண்மை ?

வாலி சொன்னது நினைவுக்கு வந்தது.

“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”
-கவிஞர் வாலி

கோபாலன்
06-01-2014, 05:39 PM
நல்ல தகவல்கள் . பகிர்ந்தமைக்கு நன்றி :)

TamilManavan
17-05-2014, 09:07 AM
அருமையான பகிர்வுகள். சுவையான செய்திகள்.

பால்ராஜ்
20-05-2014, 12:57 AM
நகைச்சுவை ஓர் ஆக்ககரமான உணர்வு..
நகைச்சுவையை நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ள ஒரு பக்குவம் வேண்டும்.

அனுராகவன்
17-08-2014, 03:12 AM
அருமையான பகிர்வுகள். இன்னும் நிறைய கொடுங்கள்,,சுவையான செய்திகள்.