PDA

View Full Version : தலைப்பில்லாத கவிதை - 5



lavanya
20-01-2004, 10:12 PM
வெறும் காலோடு
பிரகாரம் சுற்றப்
போய்விட்டாய் நீ.....
காத்திருக்கிறது என் காதலும்
உன் செருப்பைப் போலவே
வெளியில்......

puppy
20-01-2004, 10:14 PM
நல்லா இருக்கு லாவ் : உள்ளே வெளியே

நிலா
20-01-2004, 10:15 PM
அருமை!பாராட்டுகள்!

முத்து
20-01-2004, 10:18 PM
நாலு வரியில் நச்சென்று இருக்குதுங்கோ ...
பாராட்டுக்கள் ...

நிலா
20-01-2004, 10:24 PM
நாலு வரியில் நச்சென்று இருக்குதுங்கோ ...
பாராட்டுக்கள் ...


முத்து உங்களின் உற்சாகவரவேற்பைப்பார்த்தாஆஆஆ தென்றல் உங்கபக்கமா வீசியிருக்குண்ணு நினைக்கத்தோணுதுங்கோஓஓஓ!

lavanya
20-01-2004, 10:26 PM
அதானே நிலா....(மாட்னீங்கள்ள முத்து இப்ப)
நிலா நின்று கொல்லும் இனி...

natchatran
21-01-2004, 06:23 AM
லாவண்யா,
உங்கள் கவிதையின் கடைசிவரிகள்,

.....
காத்திருக்கிறேன்
நான்
உன் காலணிபோல--என்று இருந்தால்
நல்லாயிருக்கும்னு தோணுது.காதல் என்ற வார்த்தை மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதால் அதை பயன்படுத்துவதை நானெல்லாம் தவிர்த்துவிட்டேன்.கொஞ்சம் புரிந்துபுரியாமலும் சொல்வதில் ஒரு கிக் இருக்குது இல்லையா?

மன்மதன்
21-01-2004, 09:39 AM
எனக்கென்னவோ இந்த கவிதையில் காதலை கொச்சப்படுத்தியதாக தெரியவில்லை. மிக அருமையாக இருக்கிறது.. தொடருங்கள் லாவ்..

இளசு
21-01-2004, 11:11 PM
காதல் என்ற வார்த்தை மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதால் அதை பயன்படுத்துவதை நானெல்லாம் தவிர்த்துவிட்டேன்.

எல்லாரும் தவிர்க்கவேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பில்லையே..?!

இளசு
21-01-2004, 11:14 PM
[quote]தலைப்பில்லாத கவிதை - 5

வெறும் காலோடு
பிரகாரம் சுற்றப்
போய்விட்டாய் நீ.....
காத்திருக்கிறது என் காதலும்
உன் செருப்பைப் போலவே
வெளியில்......

gankrish
22-01-2004, 05:52 AM
லாவண்யா ஐந்து முத்தான கவிதைகளை கொடுத்து அசத்தி இருக்கிறீர்கள். தலைப்பில்லா கவிதைகளை களைப்பில்லாமல் படிப்போம். மேலும் எழுதுங்கள்

இக்பால்
22-01-2004, 09:13 AM
ஏன் தங்கைச்சி...எனக்கு ஒரு சந்தேகம். தலைப்பெல்லாம் எங்கே போச்சு? :)

aren
22-01-2004, 10:31 AM
ஏங்க உள்ளே போகவேண்டியதுதானே.

நன்றாக உள்ளது. தொடருங்கள்.