PDA

View Full Version : எட்டாத உயரத்தில்...



M.Jagadeesan
16-12-2013, 08:43 AM
சப்பை வயிற்றுடன் எச்சில் இலைதேடி
குப்பைத் தொட்டியில் குதிக்கின்ற நாய்!
விருந்துவரக் கா!கா! எனக்கரைந்தே ஒருசோற்றுப்
பருக்கைக்காய் மரக்கிளையில் வந்தமரும் காக்கை !
பசும்புல்லும் புண்ணாக்கும் தின்பதற்கு வழியின்றி
நசுங்கிய செய்தித்தாள் தின்னுகின்ற மாடு!
பெருஞ்சாக்கு மூட்டையுடன் பேப்பர் பொறுக்குபவன்!
வருகின்ற எதிர்காலம் சொல்லும் கிளிஜோஷியன்!
தட்டுமுட்டு சாமானும் தகர டப்பாவும்
இட்டால் இனிக்கின்ற பேரீட்சை தருபவன்!
செருப்பு தைப்பவன் ! குடைரிப்பேர் செய்பவன் !
தெருவெங்கும் சுற்றியே சாணை பிடிப்பவன் !
கம்பியில் நடக்கின்ற கூத்தாடி! தன்உழைப்பை
நம்பியே பிழைக்கின்ற தென்னை மரமேறி!
அனுமார் வேடமிட்டு அலைகின்ற யாசகன்
இத்தனைக் காட்சிகளும் பார்க்கின்ற அனுபவத்தை
மொத்தமாய் இழந்து எட்டாத உயரத்தில்
அடுக்குமாடிக் குடியிருப்பில் அனைத்து வசதியுடன்
மிடுக்குடன் வாழ்கின்ற பாவியேன் நான் !

கௌதமன்
16-12-2013, 01:48 PM
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே இது கருடன் சொன்னதல்ல...கௌதமன் சொல்வது...

நல்ல அவதானிப்பு. மகிழ்ச்சி ஜெகதீசன் ஐயா!

M.Jagadeesan
16-12-2013, 03:03 PM
கௌதமனின் மீள்வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி!

கீதம்
16-01-2014, 02:02 AM
எட்டாத உயரத்தில் இருப்பதே பெருமையென்று எண்ணும் மாந்தர்க்கு மத்தியில் இப்படி தனக்குக் கீழே உள்ள மனிதர்களையும் மிருகங்களையும் நினைந்து வாழ்க்கையின்பத்தைத் தொலைத்ததாய் எண்ணி ஏங்கும் எளிய மனத்துக்கு என் வணக்கம். எண்ணங்களை எழுத்தால் எழுதி எம்மைச் சேர்த்த பாங்கு அருமை. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
16-01-2014, 10:33 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.