PDA

View Full Version : எத்தனை பிறவி கண்டேன்



அனுராகவன்
15-12-2013, 11:26 PM
எத்தனை பிறவி கண்டேன்
நான் மனிதனாக பிறக்க
ஒரு செல்லாய் பிறந்திருப்பேன்..
மரமாய் ,செடியாய்..
எத்தனை எத்தனை
இவ்வளவு பிறந்து
இறுதியில் நான்
கண்ட உடலில்
மனிதன் ஆம்!
மனித பிறவி....
அரிய பிறவி.....

நான் செவிடுமல்ல...
நான் குருடுமல்ல..
நான் ஊமையில்ல...
நான் ஊனமில்ல..
ஆகா!! நன்றி இறைவா....
நான் கொடுத்து வைத்தவன்..
நான் கூறிய யாவும் கடந்து
பிறந்த தெய்வ பிறவி
அது தான் ஆறறிவுப்படைத்த
மனித பிறவி..

எத்தனை நன்மை செய்தேன்...
எத்தனை தீமை செய்தேன்..
அத்தனையும் இந்த பிறவியில்
கழுவ வேண்டும்....

தமிழுக்காக என்ன செய்தேன்
என் மேல் கோபம் வேண்டாம்..
நான் இன்னும் ஒன்றும் செய்யவில்லை
அதுதான் உண்மை...

என் சக மனிதன் சாகிறான்’
காக்க முடியல..
சிக்கல்,கடுமையான வறுமை
தடுக்க முடியல....
ஆக! நன்மையே செய்வோம்..
பிறருக்கு உதவுவோம்..
என் பிறவி பிறருக்கா....
அது தான் நான் பிறந்த நோக்கம்..................

பாவூர் பாண்டி
16-12-2013, 09:50 PM
பிறவிகள் கண்டும் பிறவா மனிதபிமானத்திலேயே இறந்து போகிறோம்...வாழ்த்துகள் அச்சலா

கும்பகோணத்துப்பிள்ளை
17-12-2013, 02:34 AM
புல்லாகி பூடாகி புழுவாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாய் கல்லாய் மனிதராய் .......
என வரிசை படுத்தியிருக்கிறார் மாணிக்கவாசகர்.

ஒவ்ஒன்றிலும் எத்தனை எத்தனை பிறவி எடுத்திருக்கும் இந்த உயிர்!

மனிதப்பிறவியாவதற்க்கு! மானுடராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!

அரிது அரிது மானிடராய் பிறப்பரறிது
அதிலும் கூன் குருடு நீங்கி பிறத்தலறிது...

என நம் தமிழ் முன்னோர்கள் உணர்ந்ததை எழுதியே வைத்திருக்கிறார்கள்

நீங்களும் உணர்ந்து பிறவிப்பயன் பெறவிரும்பியிருக்கிறீர்கள்......வாழ்த்துக்கள்!

அனுராகவன்
08-02-2014, 03:24 AM
நன்றி நண்பர்களே!!