PDA

View Full Version : தலைப்பில்லாத கவிதை - 3



lavanya
20-01-2004, 10:10 PM
காபி ஷாப்பின்
இருட்டான மூலையில்
விரல் தொட்டு வெகு நேரம்
பேசிக்கொண்டிருப்பாய் நீ...
நேற்று அந்த இடத்தில்
வேறு யாரோ....
இருப்பினும் நமக்கு
தெரியாதா என்ன..
அவர்களும் காபிக்காக
வரவில்லை என்று...

puppy
20-01-2004, 10:11 PM
இந்தாங்க தலைப்பு லாவ் : கா(ப்)பி லவர்ஸ்

நிலா
20-01-2004, 10:13 PM
அடடாஆஆஆஆ!ஒரு உற்சாகத்தொடர்போல இருக்கேஏஏஏஎ!
பாராட்டுகள் லாவ்!

பப்பி குசும்பு உங்களுக்கு!எங்க போனீங்க ஆளையேஏஏஏஏஎக்காணோம்!பிஸியா?

lavanya
20-01-2004, 10:20 PM
நல்ல தலைப்பு பப்பி.....

நிலா இன்னும் தொடரும்....அப்புறமாய்

இளசு
21-01-2004, 11:06 PM
அருமை லாவ்.. பாராட்டுகள்.
தலைப்பைத்தேடும் கவிதைகள் தொடரட்டும்.

இக்பால்
22-01-2004, 08:27 AM
நல்ல தொடக்கம் தங்கை... என்ன செய்தாலும் அழகாக செய்கிறீர்கள்.

aren
22-01-2004, 10:28 AM
நிச்சயம் நமக்குத் தெரியும் எதற்கு வந்திருக்கிறார்கள்.

படம் பெயரே தெரியாமல், படத்தில் வரும் காட்சிகளே புரியாமல் காதலியுடன் படம் பார்த்துவிட்டு வந்து நினைவுகள் மனதில் ஒரு ஓட்டம் ஓடிவிட்டு மறைந்தது.