PDA

View Full Version : தலைப்பில்லாத கவிதை-2



lavanya
20-01-2004, 10:08 PM
உன்னிடம் பேச
தனிமையில் எடுத்துக்கொண்ட
ஒத்திகைகள் எல்லாம்
ஒருநாள் கூட அரங்கேறவே இல்லை
எழுதிப்பார்த்ததற்கு
மட்டும் அடையாளம் இருக்கிறது
என் கவிதைகளாய்....

நிலா
20-01-2004, 10:10 PM
ஜீவனுள்ள கவிதைகளாய் உயிராய் அவ(ர்)ன் அப்படித்தானேஏ?
தொடருங்கள்!தலைப்பில்லாத கவிதை தவிப்பைச்சொல்லுது அழகாய்!பாராட்டுகள்!

முத்து
20-01-2004, 10:16 PM
ஜீவனுள்ள கவிதைகளாய் உயிராய் அவ(ர்)ன் அப்படித்தானேஏ?
தொடருங்கள்!தலைப்பில்லாத கவிதை தவிப்பைச்சொல்லுது அழகாய்!பாராட்டுகள்!


ஏங்க நிலா நீங்க வேற ..
இந்த தவிப்பே அவரோடதுதான்...
அப்படித்தானே லாவண்யா அவர்களே ... :D

lavanya
20-01-2004, 10:19 PM
அடடா முத்து...இன்னைக்கு நான் தான் மாட்டினேனா...?

puppy
20-01-2004, 10:19 PM
அடடா : காத்திருக்கும் கவிதைகள்

மன்மதன்
21-01-2004, 09:47 AM
தலைப்பில்லாத கவிதை-2

உன்னிடம் பேச
தனிமையில் எடுத்துக்கொண்ட
ஒத்திகைகள் எல்லாம்
ஒருநாள் கூட அரங்கேறவே இல்லை
எழுதிப்பார்த்ததற்கு
மட்டும் அடையாளம் இருக்கிறது
என் கவிதைகளாய்....

ஆஹா..அந்த கவிதைகளை இப்போ மன்ற நண்பர்களுக்கு தர்றீங்களா? அருமையாக இருக்கிறது.

இளசு
21-01-2004, 11:01 PM
இன்னும் தாருங்கள்..

அந்த ஒத்திகைப் பிரதிகளை..

அருமை லாவ்..பாராட்டுகள்.

இக்பால்
22-01-2004, 08:14 AM
அருமையான உண்மைதான் தங்கை.

aren
22-01-2004, 10:25 AM
நீங்கள் அவரருகே சென்றவுடன் பேச்சு திசைமாறிவிட்டதா?

இது உண்மையே. நாம் பேச நினைப்பது வேறு ஆனால் பேசிவிட்டு வருவது வேறு. இது எப்பொழுதும் நடப்பதே.

அருமையாக உள்ளது, உங்களுடைய தலைப்பில்லாக் கவிதைகளின் தொகுப்பு. தொடருங்கள்.