PDA

View Full Version : தலைப்பில்லா கவிதை - 1



lavanya
20-01-2004, 10:07 PM
கோவில் பிரகாரத்தில்
கம்பீரமாய்
அமர்ந்திருந்தாய் நீ....
சாமி தரிசனம்
அம்மன் தரிசனமாய் போய்
பொய்யாய் ஸ்லோகம்
சொல்கிறது உதடுகள்
அர்த்தநாரியாய் நானும் சிவனும்....

நிலா
20-01-2004, 10:09 PM
அடடாஆஆஆஅ லாவ்?என்ன விஷயம்?வீட்டுல விஷேஷமாஆஆஆஅ?
கலக்கல்!வாழ்த்துகள்!

lavanya
20-01-2004, 10:14 PM
இல்லீங்க நிலா கவிதை பக்கம் வந்து ரொம்ப நாளாஆஆஆஆச்சி
அதான்....

முத்து
20-01-2004, 10:14 PM
அசத்தல் கவிதை ..
பாராட்டுக்கள் ....

natchatran
21-01-2004, 06:36 AM
அருமையான காட்சி-அகக்காட்சியாகவும் இது இருப்பதால், மிகவும் ரசித்தேன்.கவிதை என்பதே அக ரகசியங்களின் வெளிப்பாடுதானே.ஆனால் இதில்
வார்த்தைகள் அதிகம்.கொஞ்சம் குறையுங்கள்...கோயில் போன்ற வார்த்தைகள் தேவையில்லை.

பிரகாரவெளியில்
உன் காத்திர அமர்வு
ஈர்க்குதென்னை
வலுவாய்

உனக்காக
ஸ்லோகம் சொல்லுதென்
உதடுகள்

இப்போது
அர்த்தநாரியாய்
நீயும் நானும்.

-இது எப்படியிருக்கு லாவண்யா?

இப்பவெல்லாம் கவிதைகளில் நான் நீ எனும் பிரயோகம் ஆண் பெண்ணைநோக்கி சொல்வதாகவோ, பெண் ஆணைநோக்கிச்சொல்வதாகவோ இருக்கணுமென்பதில்லை...இருபாலாரும் இருவரையும் நோக்கிச் சொல்வதாக அமையலாம்...எனவே, அவன் ,அவள் என்ற பிரயோகமும் தேவையில்லை.

மன்மதன்
21-01-2004, 09:35 AM
லாவ்-வின் கவிதை மற்றும் நட்சத்திரனின் பதில் கவிதையும் அருமை. கலக்குங்க..

இளசு
21-01-2004, 10:53 PM
கோவில் பிரகாரத்தில்
கம்பீரமாய்
அமர்ந்திருந்தாய் நீ....
சாமி தரிசனம்
அம்மன் தரிசனமாய் போய்
பொய்யாய் ஸ்லோகம்
சொல்கிறது உதடுகள்
அர்த்தநாரியாய் நானும் சிவனும்....

இப்படி எழுத லாவண்யா



பிரகாரவெளியில்
உன் காத்திர அமர்வு
ஈர்க்குதென்னை
வலுவாய்

உனக்காக
ஸ்லோகம் சொல்லுதென்
உதடுகள்

இப்போது
அர்த்தநாரியாய்
நீயும் நானும்.



இப்படி எழுத நட்சத்ரன்..


ஒரு கரு..
இரு பாணிகள்..

ஒரே பாணியில் எழுத
இருவர் எதற்கு..?


அவரவர் பாணியில்
அவரவர் படைப்பதே அழகு..

அலை...
22-01-2004, 05:52 AM
இயல்பாக எழுதுவதே அழகு...
லாவ்-ன் பாணிதான் பிடித்திருக்கிறது எனக்கு...
வேண்டுமென்றே குழப்பி எழுதினால் ஏனோ மனம் தானாக அடுத்தக் கவிதையை தேடுகிறது...பாமர மனம்?

aren
22-01-2004, 05:55 AM
அருமையான கவிதை வரிகள். லாவண்யா அவர்களும், நட்சத்திரம் அவர்களும் அவரவர் பானியில் ஒரு கருத்துக்கு இரு விதமான கவிதைகள். தொடருங்கள்.

இக்பால்
22-01-2004, 07:58 AM
லாவண்யா தங்கை...எனக்கு உங்கள் கவிதை புரியவில்லையே...