PDA

View Full Version : அழிந்து போன உறவு..



பாவூர் பாண்டி
05-12-2013, 05:44 PM
கனவுதன்னைக் கடந்து வந்தோம்
நினைவுகளோடு பழகித் திரிந்தோம்
திரைப்பாடலினுடே காவியக் காதல் பழகினோம்
நம்மில் ஒருவரையொருவர் மறவா
வரம் வேண்டிச் சன்னதிகள்பல சுற்றித்திரிந்தோம்
நெற்றிப்பொட்டில் உறவினை பதிவு செய்தலானோம்...

சென்ற திசையெங்கும் மறுநோக்க மறுதலிக்கிறது
மனசு
மருதாணி பூசிய கை யிணைவில்லாது
கனவுகள் ஒளி பெறவில்லை
நினைவுகள் நெஞ்சில் மட்டும் நிறைய
பாடல் மெல்லிசையற்ற வெற்றுக் காற்றானது
காணப் பொருளானான் வரங்கொடான்
அழவில்லை வானமும் நீயும்
அழிந்து போய்விட்டது உறவு மட்டும் இன்று.....

கீதம்
06-12-2013, 03:09 AM
உறவு அழிந்தாலும் உணர்வில் நீட்டிக்கும் நினைவும் அதன் நீட்சியாய்க் கனவும் இங்கே கவிதையென மலர்ந்து மணக்கிறதே...

பாராட்டுகள் பாவூர் பாண்டி.

கும்பகோணத்துப்பிள்ளை
06-12-2013, 07:09 AM
காதலில் தோல்விகொள் ஏனெனில் அது
காவியத்தின் திறவுகோல்!
எழுதப்பட்டதுமாய் எழுதப்படாததுமாய்
ஏராளமான காவியங்கள்
எம்மனதிலும் நும்மனதிலும்!

பழுவுர் பாண்டியையும் விடுமா காதல்?!