PDA

View Full Version : தோல்வியும் வெற்றிபெற்ற நாட்கள்...



பாவூர் பாண்டி
05-12-2013, 05:16 PM
எனது விடியல்
உனதானதாகக் கருதப்பெற்ற
பள்ளிப் பருவநாட்கள்!!

உனதழகிய சிரிப்பையும் அழுகையையும்
காணக் கிடைக்க யிலவில்லை..

எனது அந்நாட்கள் வெற்றியடை யாவிடிலும்
உனைக் காண்பதே வெற்றியாய் கருதப்பெற்றன!!

வெகுநேரம் உரையாடிக் கண்டதில்லை!
உனை புரிந்து கொண்டதுமில்லை - ஆனால்
என் மனம் படபடத்ததன்பே
உனைக் கண்ட இப்பொழுதில்...
தோல்வியும் வெற்றிபெற்ற நாட்கள்...
காணா இருவருடம் கடந்த பின்னும்!!