PDA

View Full Version : கும்மி பாட்டு புதுசு..!!!



சுதா
05-12-2013, 04:45 AM
http://eluthu.com/images/poemimages/f16/lpoyi_161958.jpg

கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழிலோர் பாட்டு பாடி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

சித்திரையும் பொறந்ததடி
சின்ன புள்ள தலையில
ஆங்கில உஷ்ணமும் ஏறுதடி
தணிக்க தமிழிலோர் பாட்டெழுதி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

வைகாசி வைபோகமும் காணலடி
விலைவாசியும் ஏறுதடி
வீடாகும் விளைநிலத்தை காத்து
விவசாயத்தை வளர்ப்போமென
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆனியில ஊத காத்தும் வீசலடி
உச்சி வெயிலும் தணியலடி
ஊரோரம்
மரமொன்ன நடுவோமென
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆடிப்பட்டம் வந்ததடி
அரசியல் வெள்ளமும் ஓடுதடி
அதிலே
நல்லதொரு ஆட்சியை விதைத்போமென
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆவணி பொறந்ததடி
பொன்னு விளையும் பூமியிலே
நட்ட நாத்தெல்லாம் சாகுதடி
செயற்கையை அழித்து
மண்ணோட மாசு நீக்குவோமென
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

புரட்டாசி விரதமெல்லாம் துரிதமாக
துரித உணவோடு முடியுதடி
அகமும் புறமும் பக்குவமாக
மாதமொரு விரதமெடுத்து
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஐப்பசி அடைமழையும் பொழியலடி
பொழிந்தாலும் வீணாக போகுதடி
சேகரிக்க குளமொன்ன வெட்டி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

இல்லத்தில் இன்பம் பொங்கிட
கார்த்திகையில்
வீடெங்கும் விளக்கேற்றி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

மார்கழியில்
மணி எட்டு வரை தூங்காதீர்
ஆயுளை நீட்டிட
ஆதவனுக்கு முன்யெழுந்து
அழகு கோலமிட்டு
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

தை பிறந்தும்
தமிழினத்துக்கு வழி பிறக்கலடி
போராட
தமிழர்களை ஒன்று திரட்டி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

மாசியில் மாலையிட்டு
மறுநாளே விவாகரத்து கேக்காதிங்க
மனம் விட்டு பேசி
மகிழ்ச்சியாக வாழ்வோமென்று
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

பங்குனியில்
பழந் தமிழ் பண்பாட்டிலே
ஊரெங்கும் விழாயெடுத்து
தெருவெங்கும் தேரோட்டி

கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழிலோர் பாட்டு பாடி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

---- சுதா ----

கீதம்
06-12-2013, 03:17 AM
கும்மிப்பாட்டினூடே வாழ்க்கைக்குத் தேவையான பல அம்சங்களைப் பட்டியலிட்டதோடு தமிழ் மாதங்களின் வரிசையில் பாடியமையும் சிறப்பு.

சந்தத்துடன் வரிகளை அமைத்திருந்தால் இன்னும் எளிமையாய் மனத்தில் பதியும். பாடிப்பார்க்கவும் இனிமையாயிருக்கும்.

பாராட்டுகள் சுதா. தொடர்ந்து எழுதுங்கள்.

சுதா
06-12-2013, 05:30 AM
நன்றி தோழி அடுத்த முறை சந்தத்துடன் ஒரு கும்மி பட்டு எழுதுகிறேன் ..!!!

கும்பகோணத்துப்பிள்ளை
06-12-2013, 06:24 AM
சந்தத்தோட அடிக்கலையினாலும் நல்ல
சத்தமா அடிச்சிரிக்கிறிங்க!
நெத்தியடி!

சுதா
21-12-2013, 05:15 AM
நன்றிகள் பல தோழா:)