PDA

View Full Version : தூக்கம்



rajapandian21
06-10-2013, 04:06 AM
மெல்லிய காற்று முத்தமிட
கணத்த கம்பளி வாரியணைக்க
இந்திரலோகம் கண்களை ஈர்க்க
அனுமதியின்றி தேவகானம்
என் வாயிலிருந்தேழ
காதுகள் மட்டும் காத்திருந்தன
என் அலைபேசியின்
எழுப்பு மணியோசைக்காக
பொன் நிற கணவன்
வரும் சமயமாதலால்
நாணத்தால் ஓடி மறைந்தாள்
நிலவு மங்கை
விண்ணிலும் பெண்களை
ஏகடியம் செய்வர் போலும்
மேக மங்கை சூரியனை
பஞ்சாயத்து செய்யக்கோரி
கணத்த கறுத்த மனதோடு
மறித்து மறைத்து நின்றாள்
அவள் அழுகுரலினோசை
காதுகளை கிழிக்க
அவள் கண்ணீரோ
மண்ணை சத்தமாக முத்தமிட
சேவலின் இனிய மணி
ஓசையும் கேட்கவில்லை
அலைபேசியின் எழுப்பு மணி
ஓசையும் கேட்கவில்லை
மண்ணிற்கு மழை தந்த
முத்தத்தின் சத்தத்தால்
பஞ்சாயத்து முடித்து
நடு வானில் வந்து நின்றான்
விட்டான் அவன் அம்புகளை
என் முகத்தில்
பதறியெழுந்தேன் அவை சுட்டதால்
நின்றது என் இதயம்
அலைபேசியில் நேரம் கண்டபோது
விழித்தது என் மனம்
உரைத்தது சிம்மக்குரலில்
"அடே மணி 12 ஆச்சு இப்போ ஆபிஸ்
போனா மேனேஜர் காரி துப்புவார்
பேசாம அப்டியே படுத்து தூங்கு" என்று
மீண்டும் சென்றேன் தேவலோகத்திற்கு
என் கண்களை மூடி தேவகன்னிகளைத் தேடி

(பெண்களை ஏகடியம் செய்தல் = ஈவ்-டீசிங் செய்தல்)

மும்பை நாதன்
06-10-2013, 06:30 AM
கனவில் கொஞ்சமும் நனவில் கொஞ்சமுமாய் வாழ்ந்து சுகிக்க வேண்டிய இன்றைய நிலையை நன்றாக வெளிப்படுத்தி இருக்கும் கவிதையை படைத்ததற்கு நன்றி.