PDA

View Full Version : விழாக்கால மின்சாரம்



rajapandian21
08-10-2013, 05:20 PM
சில நூறு காகிதம் அச்சிட்டு
நன்கொடை பெற்று
பல பத்து தலைகட்டிடம்
கப்பம் வாங்கி
பல நூறு ஆயிரம் காந்தி
காகிதம் செலவிட்டு
சில நாட்கள் கழிக்க
பலரின் மகிழ்ச்சியிலிருந்து
மகிழ்ச்சியை எடுத்து
சிலர் மகிழ
இரவெல்லாம் பகலாய் மின்ன
செயற்கை மின்மினியை
தெருவின் மூலை முடுக்கெங்கும்
கட்டி விட்டு
கம்பம் தவறாது எத்திசைக்கும்
ஒழிக்கும் படி
ஒலிப்பெருக்கி குழாய் கட்டி
ஓயாது உரக்க
மாமன் மச்சான் அண்ணன்
தம்பி என
மார் தட்டும் என்னினிய
டாஸ்மார்க் குடி மக்களே
அணிலிக்கு ராமனிட்ட
கோடு போல
20 அடி உயரத்தில்
மின்வாரியம் போட்ட
கம்பிக் கயிற்றில் நூலெடுத்து
விழாவிற்கு விளக்கேற்றுவது
முறையோ ... கூறு ...